பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81 புண்ணிய பூமி பாவத்தை மட்டும் செய்யவில்லை; புதுமைப்பித்தனின் உயி ரைக் குடிக்க வந்த க்ஷயரோகத்தையும் வளர்த்துவிட்ட பாவத்தையும் அள்ளிக் கட்டிக் கொண்டது. புதுமைப்பித்தன் சென்னையிலிருந்தபோது, அவருக்கு இருமல் அவ்வளவாக இருந்ததில்லை. 'ராயப்பேட்டை ஹை.. ரோட்டில் குடியிருந்த சமயத்தில் சில சமயங்களில் அவர் கொடூரமாக இருமுவதுண்டு. ஆனால் அந்த இருமலை அவர் க்ஷயரோகம் என்று சந்தேகப்படவில்லை. மேலும், சித்த வைத்திய சோதனையில் பெரிதும் நம்பிக்கை கொண்ட புது மைப்பித்தன், தம்மைச் சோதித்துப் பார்த்து விட்டதாகவும் அது க்ஷயரோகம் அல்லவென்றும், ஆஸ்துமாக் கோளாறு தான் என்றும் சொல்லிக் கொண்டார். மேலும், அந்த இரு மல் எப்போதும், அல்லது தினம் தினமும் வருவதில்லை. என்றாவது ஒரு நாள் அதிகமாகச் சுற்றியலைந்து விட்டு வந் தால் அல்லது அதிகப்படியாக சிகரெட் குடித்து விட்டால் தான் வந்து தொலைக்கும். இரும ஆரம்பித்தால், விடாமல் கண்ணீர் தெறித்துப் பொங்கும்வரை இருமுவார். அந்த இருமலை அவரோ, அவருடன் பழகின் நண்பர்களோ ஷயம் எனச் சந்தேகப்படவில்லை. மேலும், 'ஷயத்துக்குரி: சர்வசாதா ரணமான அறிகுறிகள். எதுவும்கூட அப்போது தென்படவில்லை ஆனால், புதுமைப்பித்தன் அந்தச் சமயத்தில் தமது உடம்பைக் கவனமாகப் பார்த்திருந்தால், பின்னால் அவர் க்ஷயரோகக் கொடுமைக்கு ஆளானதைத் தடுத்திருக்க முடியும். தம் உடம்பு விஷயத்தில் அத்தனை கவனம் செலுத் தாத புதுமைப்பித்தன் வெறுமனே சித்த வைத்தியப் பக் குவமான சியவனப் பிராசத்தையும், இருமலுக்கும் - புகைச் சலுக்கும் உLAசாந்தி அளித்துச் சமனப்படுத்தும் சில ஆங் கில மருந்துகளையும் உட்கொண்டதோடு சரி. முறைப்படி வைத்தியம் செய்து கொள்ளவில்லை, அது மட்டும் அல்ல. சென்ற அத்தியாயத்தில் குறிப்பிட்ட அக்னிப்பரீட்சை யான பர்வதகுமாரி புரொடக்ஷன்ஸின் பிறப்பு புதுமைப் பித்தனின் இறப்புக்கும் ஓரளவு வழி கோலி விட்டது என்றே சொல்லலாம். ஏற்கெனவே நொம்பலப்பட்டு நோஞ்சானாகப் போன உடல்; எனவே, அதில் க்ஷயரோகம்