பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓர் புதுமைப்பித்தன் தேதி: 9-2-48

    • ... காந்தி கொல்லப்பட்டார். ஊரடங்குச் சட்டம்

போட்டு நடமாட்டத்தைத் தடுத்து விட்டதால் மூன்று நாட்களாக வெளியே போகவில்லை. ஸ்டூடியோவுக்குப் பக்கத்தில் லாட்ஜ் இருக்கிறது. ஸ்டேஷனுக்குப் பக்கத்தில் ஹோட்டல் இருக்கிறது. இடையில் தூரம் 5 மைல்; ஜனப் போக்குவரத்து நடமாட்டம் தடை. யார் கேலி செய்தாலும் மருந்துகளையும் தெர்மா மீட்டரையும் போர்வையையும் எடுத்துச் செல்லும் வழக்கம் இருந்ததால் நோயைக் கவனித்துக் கொள்ள முடிந்தது. கைவசமிருந்த மருந்து காலி. மகாத்மா காந்தி அஸ்தி கரைக்கும்வரை வி') கடை. அடைப்பு. எங்கும் தீப்பற்றி எரிவதால் வெளியே போகவே முடியாது. இன்று காய்ச்சல் இல்லாத தனால் கொஞ்சம் நிம்மதி. நான் இப்போது சிகிச்சை செய்து கொள்ளும் டாக்டர் ரொம்பக் கெட்டிக்காரர். அவர் மருந்தின் விசேஷம் காய்ச்சலை நிறுத்தி இருக்கிறது'. மூன்று மாதம் படுத்த படுக்கையில் இருந்தால் குணப் படுத்த முடியும் என்று சொல்கிறார். பேசக்கூடாது என்பது . உத்தரவு. குணமாகி விடும்; பயப்படாதே. வீண் பயங்கர நினைவுகளால் மனசை அலட்டிக் கொள்ளாதே... தேதி: 19-2-48 "எனக்கு உடம்பு வரவர மோசமாகிக் கொண்டுதான் வருகிறது. சென்ற சில தினங்களாகச் சாப்பாடு. வெளி வந்து விடுகிறது, பலவீனம் உண்டு. உடம்பில் வலு இல் லாத்த;னால் நடமாட்டம் கஷ்டம்; என்னால், மூன்று மாடி ஏற முடியாத தால் என்னை இங்கு கொண்டு வந்து வைத் திருக்கிறார்கள்,... தேதி: 3-4-43 ... உடல் நிலை மோசமாகி விட்டது. அதனால்தான் போட்ட பிளான்கள் எல்லாம் பொய்யாகி விட்டன. வந்த பிறகு என் உடம்பு தேறினால் அது உள் அதிருஷ்டம் தான்...