பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புண்ணிய பூமி என்னைக் கூப்பிடத் தெரிவதால் உன் மனம் கலங்குகிறது. அத்தனையையும், கேட்டுக் கொண்டு ஆயிரம் மைலுக்கு அப்பால் கிடந்து கவலைப்படுவது எப்படி இருக்கும்?....” தேதி: 24-1-48 11.... நீளமாக எழுதக் கையில் வலுவில்லை. மூன்று நாளாக102டிகிரி வரை வந்து போகும் ஜுரம், இருமல். இன்று . சாயங்காலம் X-Ray போட்டோவும் டாக்டர் அபிப்பிராயமும் கிடைக்கும்.. இது T. B. தானா என்பது தெரிய வேறு டாக்டர்களையும் கலந்து கொள்ளப் போகி றேன் என்னைக் கவனிக்க ஆள் தேவை. ஆனால் உன்னைப் போட்டு இழுத்தடிக்க எனக்குப் பிரியமில்லை. மேலும் குழந்தையைக் கவனிக்கிறவள் என்னிடம் வரக் கூடாது... தேதி: 26-1 --43 '; ...மேலும், சுவாசப்பை இரண்டிலுமே கபம் பற்றி யிருக்கிறது. வியாதி ஒட்டுவாரொட்டி. ஆகையால் கூடு மானவரை தனிச் சாமான் புழங்கி கவும் வாயிலே துணி மூடிப் பேசவும் உத்தரவு. படுக்கையை விட்டு எழுந்து - நடமாடக் கூடாது. மற்றபடி அளவாக வேலை செய்யலாம் என்பது டாக்டர்களின் யோசனை. இவைகளைத் தெரிந்து கொண்டு மருந்து வாங்கித் திரும்பும்போது மறுபடியும் ஜூரம் 103. காய்ச்சல் இப்படி வந்து போவது இந்த நோயின் குணம்....” தேதி: 5-2-48 “'....நாலு நாட்களாக எனக்கு வெற்றிலை இல்லை என் பால் நிலைமை எப்படி என்று யோசித்துப் பார்....எனக்கு இன்றும் ஜுரம் வருகிறது. 102 ' டிகிரி ஜுரத்துடன் எழுதுகிறேன். இந்த ' மாதக் கடைசியில் அங்கு வந்து சேர முடியும். நான் அங்கு வந்த பிற்பாடு பரிதாபம் தெரியும்...