பக்கம்:புதுமைப்பித்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை).pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

அந்த வியாபாரத்தில் ஸ்ரீ சுப்பையாபிள்ளையும் பண வசூல், கணக்கு, வியாபாரம் என்ற நானாவித இலாகாக்களையும் நிர்வகித்தார். அதாவது மாண்ட்போர்டு சீர்திருத்தக் காலத்து மாகாண மந்திரிகள் மாதிரி (சுப்பையாப் பிள்ளையின் காதல்கள்).

‘அரிச்சந்திரன் மயான காண்டத்தில் ஊன்றிக்கொண்டு நிற்க வேண்டிய தடி சடக்கென்று முறிந்துவிட்டால் எப்படி இருக்கும் பின் அரிச்சந்திரன் அந்த சமயத்தில் சோகம் குலைய மிருதங்கக்காரனைப் பார்த்து உறுமுவதுபோலிருந்தது என் நண்பரின் பார்வை (புரட்சி மனப்பான்மை).

கையில் வதங்கிப் போன பத்திரிகை ஒன்றைப் பிடித்துக் கொண்டு, ஒரு மோஸ்தர் வாலிபன் நாஸூக்காக இறங்கினான். அவனது சென்னை பிராட்வே பாஷன் பிளேட் மூஞ்சியும் விதேசி மோஸ்தர் உடையும் யதாஸ்தானத்தை விட்டகன்ற மூலவர் போன்ற ஒரு விசித்திர சோபையை அவனுக்கு அளித்தன. அந்தக் காட்டு மிராண்டி ரஸ்த்தாவில் அந்த பழைய பசலி பஸ் எப்படியோ அப்படி’ (நாசகாரக் கும்பல்).

‘தனித் தனி நபரின் பக்திப் பெருக்கு டைபாய்ட் வியாதியஸ்தனின் டெம்பரேச்சர் படம் மாதிரி அன்றைய வியாபார ஒட்டத்தைப் பொறுத்ததாக இருந்தாலும், பொதுவாக சங்கத்தினரின் முழு ஆதரவு இருந்ததால் விநாயகர் பாடு சராசரி பக்தி விகிதத்திற்கு மோசமாகி விடவில்லை’ (நியாயந்தான்).

முகப் பவுடர், செண்டு இவைகளில் நம்பிக்கை வைத்து ஆட்களை மயக்கி வரும் குரூ பியான விபசாரிக்கு உதாரணம் போன்ற புகையிலை.

வர்ணக் கடுதாசியொட்டிய ஜப்பான் விளக்கு மாதிரியான சுடாத புகழ் வெளிச்சத்தில் உடம்பைக் கொஞ்சம் காயவைத்துக் கொண்டேன்.

ஆராய்ச்சியின் நுனிக் கொழுந்து வளரவேண்டுமென்ற நினைப்பினால், அவன் ஏற்றுக்கொண்ட சிலுவை அது.

இருளின் கருவைப் போன்ற குகைவாய்.

மனத்தை வெளியில் பறக்கவிட்டான். அது கூடு திரும்பும் பட்சி போல, பழைய நினைவுக் குப்பைகளில் விழுந்தது.

(தேயிலைத் தோட்டத்தில் வேலைபார்க்கும் பெண்களைத் தான் அனுபவித்துவிட்டு மேலதிகாரிக்கு வழங்குகிற நபரைப் பற்றி) “ஸ்டோர் மானேஜர் கண்ணப்ப நாயனார் ரகம் தனது இஷ்ட தெய்வத்திற்குத் தான் ருசி பார்த்துத்தான் சமர்ப்பிப்பார்.