பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுவைக் கல்லறையில்|114 என்னும் சிறப்புப் பெயர் பெற்றவர் நம் பாவேந்தர் பாரதிதாசனுர் அவர்கள். அவர் பாடல்கள் அனைத்தும் புரட்சி மணம் வீசுவன. எனினும் அவர் பேச்சும் புதுமைப் புரட்சியை ஊட்டும் தன்மையதாகவே விளங்கிற்று. ஒரு திருமணவிழா பாவேந்தர் தலைமையில் நடைபெற் றது. அத்திருமண விழாவிற்குப் பாவேந்தருடன் பசனும் சென்றிருந்தேன். மணமகன் பட்டதாரி இளை 器 மணமகள் ஓரளவே படித்தவள்.விழாவில் பாவலர் பருமான் அறிவுரை வழங்குகிருர். அது புதுமையும் புரட்சியும் கலந்த அறிவுரையாக மிளிர்ந்தது. "மணப்பெண்ணுக்குச் சில அறிவுரைகள்" என்று தொடங்கினர். பெண்ணுரிமை பற்றிப் பாரதியாருக்குப் பிறகு பாவேந்தர் தாம் மிகுதியாகப் பாடியவர் என் பதை நாம் அறிவோம். இனி அவரின் அறிவுரையைக் காண்போம்: I 'தமிழ் நாட்டினர் விருந்தோம்பலில் சிறந்தவர்கள்: வந்த விருந்தைப் பேணி அனுப்பி விட்டு, வரும் விருந்தை எதிர் நோக்கி நிற்பார்கள். விருந்தில்லாத உணவு மருந்துக்கு ஒப்பாகும் என்பது தமிழ்ப் பழம்ொழி. . விருந்தில்லாத வீடும், குழந்தையில்லாத விடும் ஒன் றென்று பாடியிருக்கிருர்கள். திருவள்ளுவரும் விருந்தோம்பலைப்பற்றி ஓர் அதிகாரமே பாடி வைத்துள்ளார். இப்படியெல்லாம் நம் நூல்கள் பேசும். மணமகளே! திருமணத்திற்குப்பின் நீங்கள் தனிக் குடித் தனம் செய்கிறீர்கள். நீ, உன் கணவன். ஒரு குழந்தை -இது உன் குடும்பம்.