பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/138

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


1371முருகுசுந்தரம் களும், பாவேந்தர் பாரதிதாசனும் பண்ருட்டி வந்தால் அiர் வீட்டில் தான் தங்குவர். நண்பர் முகுந்தன் என் போன்ற இளைஞர்களுக்கு வழி காட்டி, பாவேந்தருக்குச் செல்லப்பிள்ளை. நண்பர் முகுந்தனுக்கு வரும் திராவிட நாடு, குயில் ஆகிய இயக்க ஏடுகளைப் படித்து, இயக்கப் பற்றையும். பாவேந்தர் பற்றையும் வளர்த்துக் கொண் டேன். பள்ளி இறுதி வகுப்புத் தேர்வில் வெற்றிபெற்ற எனக்கு மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் எழுத்தர் வேல்ை கிடைத்தது. எழுத்தராகப் பணியேற்றதும், கொஞ்ச நாட்களில் இரயில்வே அஞ்சல் துறையில் அஞ்சல் பிரிப்பவராக (Sorter)த் தேர்ந்தெடுக்கப்பட்டேன். உடனே எழுத்தர் வேலையை விட்டுவிட்டு அஞ்சல் துறைக்கு மாறினேன். முதன் முதலாகத் திருச்சிராப் பள்ளி தென்னுரில் பணி ஏற்றேன். 1950-ஆம் ஆண்டில் நண்பர் முகுந்தைேடு பாவேந்த சைக் காணப் புதுச்சேரி சென்றிருந்தேன். என்னிடம் நலம் விசாரித்தார். பாவேந்தர். என் குடும்பச் சூழ்நிலை, என்தொழில், கவிதை ஆர்வம் ஆகியவைபற்றிஅவரிடம் எடுத்துச் சொன்னேன் இளமையும், அழகும், திரைப் படத்துக்கேற்ற முகவெட்டும் பெற்றிருந்த என்னைக் கூர்ந்து கவனித்தார் பாவேந்தர். 'உங்களோடு தங்கிக் கவிதை எழுதக் கற்றுக் கொள்ள விரும்புகிறேன்’ என்று என் விருப்பத்தைத் தெரிவித் தேன். "கவிதை எழுத எப்போது வேண்டுமானலும் கற்றுக் கொள்ளலாம்; முதலில் நான் சொல்வதைச்செய்; புலவர் ஏ. கே. வேலனுக்குக் கடிதம் கொடுக்கிறேன். சென்று பார்! உன்க்கு நல்ல முகவெட்டும் குரல் வளமும் இருக் கின்றன. வாய்ப்புக் கிடைத்தால் எதிர்காலத்தில் நீபெரிய நடிகன் ஆகலாம்’ என்று சொன்னர்; புலவர் ஏ.கே.வ்ேலனுக்குப் பரிந்துரைக் கடிதம் ஒன்றும் தந் தார். இக்க்டிதம் கொண்டு வருபவர் நம்பிள்ளை. அழகும் ஆற்றலும் மிக்கவர். முன்னுக்குக்கொண்டுவர வேண்டி யது உன் பொறுப்பு’ என்று கடிதத்தில் எழுதியிருந் தாா.