பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33|முருகுசுந்தரம் மணர்களை உண்மையான பிராமணர்; போலிப் பிரா மணர்’ என்று பிரித்துப் பேசுவார். உண்மையான வைதீகமும், உண்மையான சீர்திருத்தமும் ஒன்று என்பது அவர் கொள்கை. 'காந்தியின் கொள்கையும் அது தான்’ என்று பாரதி கூறுவார்.’’-பாரதியைப் பற்றிப் பாரதிதாசன் கூறிய கருத்துக்கள் இவை. பாரதிதாசன் கோளுப்பட்டில் தங்கியிருந்த போது அடிக்கடி கூட்டங்களுக்குச் செல்வார். நானும் உடன் செல்வதுண்டு. ஒரு முறை புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள சிற்றன்ன வாசலுக்குப் பாரதிதாசனும், நானும், சில நண்பர்களும் சென்ருேம். அங்கே சிவனடியார் சங்கக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. நான் அதில் கலந்து கொண்டேன். எனக்குச் சைவத்திலும் ஈடுபாடு உண்டு. "என்னய்யா! நீர் சுயமரியாதைச் சங்கத்திலும் உறுப் பினர்! சிவனடியார் சங்கத்திலும் உறுப்பினர்! நல்ல வேடிக்கை!" என்று கூறிச் சிரித்தார் பாரதிதாசன். சிற்றன்ன வாசலில் உள்ள பல்லவர் கால ஓவியங்களைப் பார்த்து மகிழ்ந்து விட்டு அங்கிருந்த கோவிலுக்குள் துழைந்தோம். அங்கு ஒரு வேர்ப்பலாமரம் இருந்தது. அதை எங்களுக்குக் காட்டி, "வேர்ப்பலா என்பது மரத்துள் தனி இனம். இதோ பாருங்கள் இதன் வேரி லேயே பழங்கள் இருக்கின்றன’’ என்று சொல்லி ஆளுக் கொரு பழத்தைப் பறித்துத்தந்தார். வேர்ப் பலாப்பழம் வேப்பம் பழத்தை விட சற்றுப் பெரிதாக இருந்தது; மிகவும் இனிப்பாக இருந்தது. 'கோரிக்கையற்றுக் கிடக்குதண்ணே-இங்கு வேரில் பழுத்த பலா! என்ற எனது பாட்டு வரிகளைக் கேலி செய்து மேடையிலே என்னை எதிர்த்துக் கேள்விகள் கேட்டனர். வேர்ப்பலா என்று ஒரு மரம் இல்லையென்று வாதிட்டனர்' என்று கூறிஞர் பாரதிதாசன். முத்தமிழ் நிலையம் பாரதிதாசன் காடுை காத்தான் வை.சு. சண்முகம் செட்டியார் இல்லத்தில் தங்கியிருந்த போது, அவரு டைய நூல்களை வெளியிடவும், அவர் நாடகங்களை நடத்தவும் முத்தமிழ் நிலையம்’ என்ற பெயரால் ஓர்