பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/39

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புதுவைக்கல்லறையில்8ே அதே வீட்டில் தங்கினர். சென்னையில் மாசிலாமணி முதலியார் என்ற சிறந்த சித்த மருத்துவர் ஒருவர் வாழ்ந்தார்; அவர் பாரதிதாச ணுக்கு மிகவும் வேண்டியவர். அவர் வீட்டிற்குப் பின் புறம் இருந்த ஒரு சிறிய அறையில் 器 திங்கள் தங்கி யிருந்தோம். அப்போது சென்ன்ையில் நடிகவேள் இராதா நாடகம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது தான் பாரதிதாசனுக்கும் எங்களுக்கும் மனவேறுபாடு ஏற்பட்டுப் பிரியவேண்டியசூழ்நிலை ஏற்பட்டது. சென்னைத் திருவல்லிக்கேணி வீட்டில் இருந்த போது "வருங்காலத்தமிழகம்’ என்ற தலைப்பில் ஒரு நூல் எழுதித் தரும்படி திருவாளர் சம்பந்தம் என்ற இயக்கத் தோழர் என்னிடம் கேட்டார். நானும் எழுதி முடித் திருந்தேன். அந்த நூலின் கையெழுத்துப் படிய்ைப் பெறுவதற்காகத் திரு சம்பந்தம் என் வீட்டுக் கதவைத் தட்டித் திறந்து கொண்டு உள்ளே வந்தார். நான் அப்போது வீட்டில் இல்லை. உள்ளே நுழைந்த சம்பந் தத்தைக் கண்ட பாரதிதாசன் உள்ளே வராதே!’’ என்று சொல்லி விரட்டி விட்டார். அடுத்த நாள் சம்பந் தம் என்னைத் தனியாகச் சந்தித்து, நடந்தவற்றைக் கூறி வருந்தினர். நான் வீட்டில் இல்லாத நேரங்களில் பாரதிதாசன் தம் நண்பர்களுடன் கூடிக் குடித்து விட்டுக் கும்மாளமிடு வதை என்னுல் சகித்துக் கொள்ள முடியவில்லை. கொஞ்சங் கொஞ்சமாகப் பாவேந்தருக்கும் எங்களுக்கும் இருந்த குடும்ப நட்புத் தேய்புரிப் பழங் கயிருகி இறுதி யில் இற்று விழுந்தது. அவரோடு ஒன்ருகத் தங்கும் நிலை மாறியது. நான் பாரதிதாசனப் பார்த்துச் சொன்னேன்: 'நீங்கள் பெருங்கவிஞர். உங்களுடன் நெருங்கிப் பழகி உங்கள் சிறப்பையெல்லாம் நான் அறிந்து கொண் டேன். நம் பிரிவு துன்பமானதுதான். என்ருலும், நாம் இனி எங்கு வேண்டுமானலும் வெளியில் சந்தித்துக் கொள்ளலாம்; வீட்டில் வேண்டாம்' என்றேன். அதன் பிறகு பாரதிதாசன் என் இல்லத்துக்கு வருவதில்லை.