பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/84

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


83|முருகுசுந்தரம் வாயிலாகப் புரட்சிக் கவிஞரைப் பற்றி (அப்போதெல் லாம் பாவேந்தரை அப்படித்தான் அழைப்பது வழக்கம்) நிறைய நிறையக் கேட்டு மகிழ்ந்த நான் அவரைக் கண்ணுரக் கர்ணக் கொதித்துக் கொண்டிருந்தேன். ஆளுல் வெள்ளிவிழாவையொட்டிப் பாவே கவிதையை மட்டுமே படித்து நிறைவு கொள்ள வேண் டியதாயிற்று. ஓரிரு மாதங்களில் ஒரு சிறப்பு நிகழ்ச்சிக்கு அண்ணுமலைப் பல்கலைக் கழகம் ஏற்பாடு செய்ய நேர்ந் தது. வெள்ளி விழாவில் பல்கலைக் கழகத்தோடு தொடர் புடைய பலருக்கு சிறப்பு டாக்டர் பட்டம் வழங்கப் பட்டது. அவர்களில் ஒருவர் நாவலர் சோமசுந்தர பாரதியார். அவர் பட்டம் பெற்றபோது பட்டமளிப் விழர் மன்றத்தில் எழுந்த கரவொலியும் மகிழ்ச் ஆரவாரமும் அடங்க நெடு நேரமாயிற்று. இந்நிகழ்ச்சி, அந்நாள் தமிழக ஆளுநராக இருந்த ரீபிரகாசாவுக் குப் பெரும் வியப்பை உண்டுபண்ணியது. இதல்ை நாவலர் பாரதியாரைக் கெளரவிக்க இரண் டொரு மாதம் கழித்து மற்ருெரு விழாவைப் பல்கலைக் கழகம் ஏற்பாடு செய்திருந்தது. அவ்விழாவுக்கு நாவலர் பாரதியாருடன் ரா.பி. சேதுப்பிள்ளை, தெ.பொ.மீ ஆகியோரும் பாவேந்தர் பாரதிதாசனும் அழைக்கப்பட்டிருந்தனர். பல்கலைக்கழக விருந்தினர் விடுதியில் பாவேந்தர் தங்கி யிருந்தார். மாணவர் கூட்டம் அவரை மொய்த்துக் கொண்டது. அப்போது நான் ஆசிரியராகவும், ச. மெய்யப்பன் துணை ஆசிரியராகவும் இருந்து நடத்தி வந்த முத்தமிழ் மலர் கையெழுத்து ஏட்டினை அவர் பார்வைக்குப் பணிவுடன் கொடுத்தேன். மாணவர் கனின் ஓவிய வண்ணமும் காவிய நேர்த்தியும் பார்த்து மகிழ்ந்து 'நறு மலர் இஃதே' என்று எழுதிக் கை யொப்பமிட்டுத் தந்தார். மற்ருெரு மாணவர் தயாரித்த மலரை அவர் பார்த்துக் கொண்டிருந்தபோது அதன் ஆசிரியரான மாணவர், ஒரு பாராட்டுக்கவிதை எழுதித் தர வேண்டினர். பாவேந்தர் ஒன்றும் பேசவில்லை. மீண் இம் மீண்டும் அம்மாண்வர் வற்புறுத்திக் கேட்டதும் |ரண்டு வரிகள் எழுதினர். பிறகு அந்த மாணவரை சீறிட்டுப் பார்த்து இதற்குப் பொருள் சொல்' என்று