உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுவைக் கவிஞர் பாரதியார்-ஒரு கண்ணோட்டம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுப்பிரமணிய பாரதிரார் : ஒரு கண்ணோட்டம் 23 புராணமாகவும் விரிந்தது. சுந்தரமூர்த்தி அடிகளின் சுவட்டினைப் பின்பற்றிக் காந்தியடிகள், தாதாபாய் நெளரோஜி திலகர், லாலாலஜபதிராய், வ. உ. சிதம்பரம் பிள்ளை போன்ற விடுதலை தொண்டர்களைப் பாடிப் பாடிப் போற்றினார் நம் கவிஞர். மொழிப்பற்று: நாடும் மொழியும் பண்டிருந்தே நம் நாட்டவர் போற்றி வருகின்றனர். எடுத்துக்காட்டாக, பொருப்பிலே பிறந்து தென்னன் புகழிலே கிடந்து, சங்கத்து இருப்பிலே இருந்து, வையை ஏட்டிலே தவழ்ந்த பேதை நெருப்பிலே நின்று, கற்றோர் நினைவிலே நடந்துஓர் ஏன மருப்பிலே பயின்ற பாவை மருங்கிலே வளரு கின்றாள்" என்பது வில்லி பாரத சிறப்புப் பாயிரம். பாரதியார் ஒருபச்சைத் தமிழ் மகன்; தமிழகத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். மொழியையும் இனத்தையும் நாட்டையும் இணைத்துப் பாடிய பாரதீயம் இவர்தம் இணையற்ற கொள்கை. - வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர் வாழிய பாரத மணித்திரு நாடு." 20. வில்லி பாரதம்-சிறப்புப் பாயிரம்-1 21. தே.கீ. வாழிய செந்தமிழ்.