உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுவைக் கவிஞர் பாரதியார்-ஒரு கண்ணோட்டம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 புதுவை (மை)க் கவிஞர் என்ற கொள்கை நம்மையெல்லாம் ஈர்க்கின்றது. தம் இனமக்கட்கு விடுதலை வேட்கையையும், மொழிப் பற் றையும் குழைத்து ஊட்டிய கவிஞர் பெருமான் தமிழகத்தின் பண்டைய பெருமைகளையும் தமிழர்களின் வெற்றிகளையும் கூறுகின்றார். சிங்களம் புட்பகம் சாவக-மாதிய திவு பலவினும் சென்றேறி-அங்கு தங்கள் புலிக்கொடி மீன்கொடியும்-நின்று சால்புறக் கண்டவர் தாய்நாடு." என்று கீழ்த்திசை வெற்றிகளையும், விண்ணை யிடிக்கும் தலையிமயம்-எனும் வெற்பை யடிக்கும் திறனுடையார்-சமர் பண்ணிக் கலிங்கத் திருள்கெடுத்தார்-தமிழ் பார்த்திவர் நின்ற தமிழ்நாடு." என்று வடதிசை வெற்றிகளையும் சுட்டிக்காட்டுவர். பாரத நாட்டுணர்வையுடைய கவிஞர் இமய வெற்றியை யும் கலிங்க வெற்றியையும் ஒதுக்கிவிடாது கூறுதல் குறிப் பிடத் தக்கது. இந்திய நாட்டுணர்விலும் தமிழகத்தின் சிறப்பு கலந்தே மிளிர்கின்றது. மேலும், சினம் மிசிரம் யவனம் இன்னும் தேசம் பலவும் புகழ்விசிக் - கலை ஞானம் படைத்தொழில் வாணிகமும் - மிக நன்று வளர்த்த தமிழ்நாடு: 22. டிெ செந்தமிழ் நாடு-8 23. டிெ டிெ-9 24. டிே. டிெ - 10