உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுவைக் கவிஞர் பாரதியார்-ஒரு கண்ணோட்டம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுப்பிரமணிய பாரதியார் : ஒரு கண்ணோட்டம் 25s என்று சீனம், மிசிரம், யவனம் முதலிய மேற்றிசை நாடு களில் புகழ் பரப்பிய தமிழ்நாடு என்று பெருமிதத்துடன் பேசுகின்றார். இங்ங்னம் பழம் பெருமைகளை யெல்லாம் பேசி எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே ஒரு விடுதலை ஆற்றல் பிறக்க வேண்டும் என்று விழை கிறார்; பேரவாக் கொள்ளுகின்றார். வள்ளுவன்பற்றிய இவர்தம் புகழ்மாலை ஒப்புயர் வற்றது. திருவள்ளுவ மாலையில் உள்ள ஐம்பத்து மூன்று பாராட்டுகளும் இவருடைய. - வள்ளுவன் தன்னை உலகினுக் கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு,” என்ற பாராட்டுக்கு ஈடு சொல்ல முடியா? வள்ளுவன் தமிழ்நாட்டின் கொடைப் பொருள் என்று மொழி யோடும் நாட்டோடும் வைத்துப் புகழ்ந்த கவிஞர் இவர் ஒருவரேயாவர். இந்த மாபெரும் புலவனை உலகிற்கு ஈந்து தமிழ்நாடு பெற்றது வான்புகழாகும். இங்ங்ணம் புகழ் வாணிகம் நடத்திய பாரதீயம் தனிப் பெருஞ் சிறப் புடையது; ஒப்பற்ற புதுமைப் போக்கைக் கொண்டது. நாட்டுப் பற்றைப் போல் தமிழ்மொழியில் பற்றும் பாரதியாரிடம் மிக்கிருந்தது. பாருக்குள்ளே நல்ல நாடு பாரத நாடு’ என்று பறை சாற்றியது போலவே, தாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிய மொழியை எங்கும் கண்டதில்லை என்று வீறு பேசு கின்றார். தமிழைப்பற்றி இவர் இயற்றிய நான்கு பாடல்களும் தமிழர்களால் பொன்னே போல் போற்றப் பெற வேண்டியவை. அவற்றில் உணர்த்தப் பெறும் செய்திகளை உணர்ந்து உணர்ந்து தமிழர்கள் வீறு: 25. டிெ. டிெ - 7 26. தே. கீ. தமிழ் - 1