உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுவைக் கவிஞர் பாரதியார்-ஒரு கண்ணோட்டம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுப்பிரமணிய பாரதியார் : ஒரு கண்ணோட்டம் 29 பின்ன ருள்ள தருமங்கள் யாவும் பெயர்வி ளங்கி யொளிர நிறுத்தல், அன்ன யாவினும் புண் ணியம் கோடி ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல்" என்று பேசுவார். அப்பொழுதுதான் தமிழகம் கல்வி சிறந்த தமிழ் நாடு' என்ற பழம் பெரும் புகழை நிலை நிறுத்தும் என்பது கவிஞரின் நீள் நோக்கு. கல்வி பற்றிய இவர்தம் சிந்தனை பல கிளைகளில் சென்றுள்ளது என்ப தையும் காண்கின்றோம். நாற்றங் கால்களை நன்கு கவனித்தால்தான் உழவுத் தொழில் வளமாக அமையும். அது போலவே குழந்தைகளைத் தொடக்கத்திலிருந்தே சிறந்த முறையில் கல்வி கற்றலில் ஈடுபடுத்த நினைக்கும் கவிஞர், காலை எழுந்தவுடன் படிப்பு - பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு; மாலை முழுதும் விளை யாட்டு -என்று வழக்கப் படுத்திக் கொள்ளு பாப்பா.” என்று பாப்பாவுக்கு - குழந்தைக்கு - அன்பு வழியில் அறிவுரை பகர்கின்றார். தொடக்க நிலைக் கல்விக்கு ஒரு பாட திட்டத்தையே வகுத்துக் காட்டுகின்றார். (அ) எழுத்து, படிப்பு, கணக்கு; (ஆ) இலேசான சரித்திரப் (வரலாற்றுப்) பாடங்கள்; (இ) பூமி சாஸ்திரம் (புவியியல்); (ஈ) மதப் படிப்பு (சமயக் கல்வி), (2) ராஜ்ய சாஸ்திரம் (Civics); (ஊ) பொருள் நூல் (Economics); (எ) சயனஸ் அல்லது 2. டிை. டிெ - 9 3. பா. கா. பாப்பா பாட்டு - 6