உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுவைக் கவிஞர் பாரதியார்-ஒரு கண்ணோட்டம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 புதுவை (மை)க் கவிஞர் பெளதிக சாஸ்திரம் (இயற்பியல் - Physics); (ஏ) கைத் தொழில், விவசாயம் (வேளாண்மை), தோட்டப் பயிற்சி (gardening), வியாபாரம் (வாணிகம்) (ஜ) சரீரப் (உடற்) பயிற்சி (ஒ) யாத்திரை (சுற்றுலா) இவற்றை அநுபவ அடிப்படையில் காட்டுகின்றார்; கற்பிக்க வேண்டும் என்று சுட்டியுரைக்கின்றார். நடைமுறையில் மேற் கொள்ள வேண்டியதற்குப் பொதுக் குறிப்புகளையும் தருகின்றார். தாய்மொழி மூலம் கல்வி பயிற்றப் பெறுதல் வேண்டும் என்பது இவர்தம் உயிராய கொள்கை, ஆங்கிலக் கல்வி : ஆங்கிலக் கல்வி பற்றி இவர் கூறும் கண்டனக் கருத்துகள் மிகைபடக் கூறுவனவாகவே தோன்றுகின்றன. காந்தியடிகள், பண்டித ஜவகர்லால்நேரு, இராஜாஜி போன்ற பெருந்தலைவர்கள் இம்முறைக் கல்வியைப் பெற்றவர்களே. இவர்கள் யாவரும் கெட்டா போனார்கள்: இம்முறைக் கல்வியின் விளைவு பற்றி. செலவு தந்தைக்கோ ராயிரம் சென்றது; தீங்கெ னக்குப்பல் லாயிரம் சேர்ந்தன; நலமோ ரெள்துணை யும்கண்டி லேனிதை நாற்ப தாயிரம் கோயிலிற் சொல்லுவேன். என்று இவர் கூறும் கருத்து ஒப்புக்கொள்ளத் தக்கதாக இல்லை. இந்தக் கல்வி முறையைப் வார்தாக் கல்வி முறை'யாலும், இராஜாஜி கொண்டு வந்த ‘குலமுறைக் கல்வி'யாலும் தகர்த்தெறிய முடியவில்லை. அவைதாம் நம் நாட்டில் செல்லாக் காசாயின. நாடு விடுதலை யடைந்து கிட்டத்தட்ட நாற்பதாண்டுகட்கு மேல் 4. பாரதியார் கட்டுரைகள். பக். (353- 365) 5. சுயசரிதை - 29