உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுவைக் கவிஞர் பாரதியார்-ஒரு கண்ணோட்டம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுப்பிரமணிய பாரதியார் : ஒரு கண்ணோட்டம் 59 வேதங்கள் என்றவற் றுள்ளே - அவன் வேதத்திற் சில சில கலந்த துண்டு: வேதங்க ளன்றி யொன்றில்லை - இந்த மேதினி மாந்தர் சொலும் வார்த்தைக ளெல்லாம் என்று உண்மை நிலைமையை ஒளிக்காமல் எடுத்துரைப் பவன். உலக நன்மைக்காக வருணாசிரம தருமம் ஏற்படுத் தினர் பண்டையோர். அதன் உண்மைப் பொருளை உண ராமல் பின் வந்தோர் அதனைக் கெடுத்துக் குட்டிச் சுவராக்கினர். இன்று உண்மை வேதம் இன்னதென் பதை உணராதவர்கள் வேதம், வேதம்’ என்று தவளை கள்போல் பொருளற்ற கூச்சல்களை எழுப்புகின்றனர். வருணாசிரம தர்மத்தைப் பற்றிப் பாரதியின் கண்ணன் கூறுவது: நாலு குலங்கள் அமைத் தான் - அதை நாசமுறப் புரிந்தனர் மூட மனிதர் சிலம் அறிவு கருமம் - இவை சிறந்தவர் குலத்தினில் சிறந்த வராம் மேலவர் கிழவர் என்றே வெறும் வேடத்திற் பிறப்பினில்விதிப்பன வாம்: போலிச் சுவடியை யெல்லாம் - இன்று பொசுக்கிவிட்டா லெவர்க்கும் நன்மை யுண் டென்பான் இப்பகுதியைப் படிக்கும்போது தந்தை பெரியாரே' கண்ணனாக நின்று பேசுவதுபோல் தோன்றுகின்றது.