உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுவைக் கவிஞர் பாரதியார்-ஒரு கண்ணோட்டம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுப்பிரமணிய பாரதியார் : ஒரு கண்ணோட்டம் 69 இராமனை (ஆண்) நாடி வந்தது ஒரு விதி விலக்கு. இதி காச உலகில் கோபியர் கண்ணனை நாடி அலைவது சீவான்மாக்கள் பரமான்மாவை நாடி அலைவதற்குக் குறியீடாகும். தனிப் பாடல்கள்: கண்ணனைப் பற்றி "தோத்திரப் பாடல்கள்', வேதாந்தப் பாடல்கள்’ என்ற பிரிவுகளில் பல்வேறு தலைப்புகளில் பதினான்கு பாடல்கள் காணப்படுகின்றன. இவற்றுள் இறைவா? இறைவா?' என்ற இசைப் பாடலொன்றே இவர் வைணவதத்துவத்தை நன்கு அறிந் தவர் என்பதற்குச் சிறந்ததோர் எடுத்துக்காட்டாக அமைகின்றது. இதனை மட்டிலும் விளக்கி இப் பகுதியைத் தலைக்கட்டுவேன். எத்தனைகோடி இன்பம் வைத்தாய்-எங்கள் இறைவா! இறைவா! இறைவா! என்பது இசைப்பாடலின் பல்லவி. இங்குக் கடவுளைப் பொதுவாக இறைவா!' என்றுதான் விளிக்கின்றார்கசேந்திரன் ஆதிமூலமே!’ என்று பொதுவாய் விளித்தது போல, : சித்தினை அசித்துடன் இணைத்தாய் - அங்கு சேரும் ஐம்பூதத்து வான்.உலகு அமைத் தாய அத்தனை உலகமும் வண்ணக் களஞ்சியம் ஆகப் பலப்பலநல் அழகுகள் அமைத்தாய் 13. தோ. பா.-36, இறைவனை வேண்டுதல். -