உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுவைக் கவிஞர் பாரதியார்-ஒரு கண்ணோட்டம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 புதுவை (மை)க் கவிஞர் இதில் சித்து, அசித்து, ஈசுவரன் என்ற மூன்று விசிட்டாத்வைத தத்துவங்கள் இயைந்து நிற்கும் அதிசயம் நம் கருத்தினைக் கவர்கின்றது. சித்து என்பது அறிவுள்ள ஆன்மா, அசித்து என்பது, உயிரற்ற சடப்பொருள்: உடலும் இதனுடன் சேரும். சித்தாய உயிரை அசித்தாய உடம்புடன் இணையச் செய்து அந்த உயிரை இயக்கும் இறைவனின் செயலையும், அந்த உயிர்கள் அசித்தினைக் கொண்டு கைபுனைந்தியற்றி எத்தனையோ கோலங்கள் புனைந்து தமக்கு வேண்டிய விதவிதமான வசதிகளை யெல்லாம் அமைத்து இந்த உலகினைக் கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புலனுக்கும் ஏற்ற வண்ணக் களஞ்சியமாக ஆக்கிக்கொள்ளும் அற்புதத் திறத்தினையும் வியந்து போற்றுகின்றோம். எம்பெருமான் தலைமைப் பொறியாளராக நின்று எத்தனையோ பொறியாளர்களையும் எண்ணற்ற தொழிலாளர்களையும் கொண்டு எத்தனையே நீர்த்தேக்க அணைகளைக் கட்டி (எடு. மேட்டூர் அணை, கர்நாடகத்தில் கிருஷ்ண ராஜ சாகர் போன்றவை)யுள்ளதையும், அங்ங்னம் சேமித்த நீரைக்கொண்டு பல்லாயிரக் கணக்கான உழவர்களால் பல இலட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களை வளமாக்கிய செயல்களையும் நாம் எண்ணி எண்ணி இறும்பூதெய்து கின்றோம். அடுத்து, முத்தியென்று ஒருநிலை சமைத்தாய் - அங்கு முழுதினையும் உணரும் உணர்வு அமைத் தாய பத்தியென்று ஒருநிலை அமைத்தாய் - எங்கள் பரமா! பரமா! பரமா! - என்ற சரணத்தில் பரமபத நரதனைக் குறிப்பிடுவதுடன் முத்தி என்ற வீடுபேற்றையும், அதனையடையும் வழி