உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுவைக் கவிஞர் பாரதியார்-ஒரு கண்ணோட்டம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுப்பிரமணிய பாரதியார்:ஒரு கண்ணோட்டம் 71 யாகிய பக்தியையும் குறிப்பிடுகின்றார். எட்டைய புரத்தில் பிறந்து, நெல்லையில் வாழ்ந்த கவிஞர். திருக் குருகூரில் (ஆழ்வார் திருநகரியில்) அவதரித்த நம்மாழ் வாரின் தத்துவத்தில் ஆழங்கால் படுதல் இயல்பே யன்றோ? 5. சக்தி தாசா: வாரணாசி வாழ்வும், கல்கத்தா வாழ்வும் புதுச்சேரியில் வாழ்ந்தபோது கொண்ட அரவிந்தரின் தொடர்பும் கவிஞரைச் சக்தி வழிபாட்டில் ஈடுபடுத்தியனவாகக் கருதலாம். சர்வம் விஷ்ணு மகம் ஜகத்’ என்ற சமய மரபு ஒன்று உண்டு. பாரதியாருக்குச் "சர்வம் சக்தி மயம் ஜகத் என்ற தத்துவம்தான் அவரது மூச்சாக அமைகின்றது. இதுவே பேச்சாகவும் கவிதையில் வழிந்தோடுகின்றது. பாரதியாரைச் சக்தி வழிபாட் டாளர் - சக்திதாசர்’ என்று சிந்திப்பதற்கு முன்னர் சக்தியைப்பற்றி நமது சமயம்-சைவ சித்தாந்தம்-என்ன கூறுகின்றது என்பதை விளக்குதல் மிகவும் பொருத்த மாகும் எனக் கருதுகின்றேன். சைவ சித்தாந்தம் முடிந்த முடியாகக் கொள்வது பதி: பசு, பாசம்’ என்பதாகும். இவற்றுள் பதி என்பது' இறைவன்; கடவுள்; "பரமான்மா’ எனபடுவதும் இதுவே யாகும். பசு என்பது, ஆன்மா உயிர். சீவான்மா' எனப் படுவதும் இதுவேயாகும். பாசம் என்பது, தளை: அஃதாவது உயிரைப் பிணித்துள்ள கட்டு, சைவ சித்தாந்த படி இவை மூன்றும் தனித் தனிப்பொருள்களாகும். இந்த மூன்று பொருள்கட்கும் எந்நாளிலும் தோற்றமும் இல்லை; முடிவும் இல்லை. தோற்றம் முடிவும் அற்றபொருள் 'அநாதியாகும் அஃதாவது 'ஆதி இல்லாதது. ஆதி இல்லையாதலின் அந்தமும் இல்லை. இதனைத் திருமூலர்,