உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுவைக் கவிஞர் பாரதியார்-ஒரு கண்ணோட்டம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 புதுவை (மை)க் கவிஞர் பதிபசு பாசம் எனப்பகர் மூன்றின் பதியினைப் போற்பசு பாசம் அநாதி." எனத் தெளிவுபடுத்துவர். பாரதியாரின் சக்திகொள்கையை பற்றி விளக்குவதற்கு பதியை மட்டிலும் எடுத்துக் கொள்வது போதுமானது. ஒரு பொருளுக்குப் பொது இயல்பு' என்றும், சிறப்பு இயல்பு' என்றும் இரண்டு இயல்புகள் உண்டு என்பதை நாம் அறிதல் வேண்டும். "இயல்பு என்றாலும் இலக்கணம் என்றாலும் ஒன்றேயாகும். ஒரு பொருளுக்கு அதன் தன்மையில் இயல்பாக என்றும் உள்ள இயல்பு சிறப்பியல்பு' எனப்படும். மற்றொரு பொருளின் சார்பு காரணமாக ஒரு பொருளின்கண் உண்டாகி அச் சார்பு நீங்கியவழி உடன் நீங்கும் இயல்பு பொது இயல்பு. எனப்படும். இவ்வாறு சித்தாந்தம் பேசும் சிறப்பியல் பைச் சொரூப இலக்கணம்' என்றும் பொது இயல்பைத் 'தடத்த இலக்கணம்' என்றும், வழங்குவர் சித்தாந்திகள். சொரூபம் என்பது தன் இயல்பு, தடத்தம் அயலிலுள்ள பொருட்கண் இருப்பது. பதி ஏனைய இரண்டையும்விடப் பேராற்றல் வாய்ந் தது. சுதந்திரம் உடையது. ஆகவே பிறிதொரு பொருளின் சார்பினால் மாறுபடாத தன்மையுடையது. பதி. பிறிதொன்றை நோக்காது தன்னையேதான் நோக்கி நிற்கும் நிலையில் காணப்படும் இயல்புகளே பதியின், சொரூப இலக்கணமாகும். பதி உலகத்தை நோக்கி நிற்கும் நிலையில் காணப்பெறும் இயல்புகள் தடத்த இலக்கணமாகும். - பதியின் சொரூப இலக்கணத்தை விளக்குவேன். இது குணம் குறிகளைக் கடந்தநிலை. பதி ஒன்றே; அதாவது: 1. திருமந்திரம். முதல் தந்திரம் உபதேசம்-3