உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுவைக் கவிஞர் பாரதியார்-ஒரு கண்ணோட்டம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vii இந்தச் சிறு நூலும் ஒருவரது அணிந்துரையுடன் வெளி வரவேண்டும் என்பது என் அவா. பெரும்பாலும் என் நூல்கள் நான் அறிந்த பெரியவர்கள், அறிஞர்கள், புலவர்கள், உடன் பணியாற்றியவர்கள், நண்பர்கள், என் மாணவர்கள் இவர்களின் அணிந்துரைகளைப் பெற்று வெளி வருதலை ஒரு மரபாகப் போற்றி வருகிறேன். ஆந்த முறையில் என் அருமை மாணவர் -இலக்கன மொழியில் சொன்னால் தலை மாணாக்கர் டாக்டர் என். கடிகாசலத் தின் அணிந்துரை பெற்று இந்நூல் வெளி வருகின்றது. திருப்பதியில் நான் பணியாற்றியது போது இவர் எம். ஏ. பயின்றபோது (1971-73) என் மாணவர்; கற்பதை அக் கறையுடன் கற்றதால், முதல் வகுப்பில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று இரண்டு த்ங்கப் பதக்கங் களைப் பெற்றார். பின்னர்ப் பல்கலைக் கழக மானிய ஆணையத்தின் படிப்பூதியம் பெற்று மூன்று ஆண்டுகள் என்னை வழிகாட்டியாகக் கொண்டு ஆய்ந்து பிஎச்.டி. பட்டமும் பெற்றார், ஆய்வில் வியத்தகு அக்கறை காட்டி னார். அக் காலத்தில்_அனைத்திந்திய நிலையில் பல் மாநிலங்களில் நடைபெற்ற கருத்தரங்குகளில் நான் கலந்துகொண்டபோதெல்லாம் இவரை என்னுடன் இட்டுக் கொண்டு செல்வேன். அக் கருத்தரங்குகளில் ஆய்வுக் கட்டுரைகளைப் படிக்கவும் செய்வேன். அற்புத மிாகக் கட்டுரைகள் தயாரித்துக்கொண்டு வருவார்; அறிஞர்களின் பாராட்டுதல்களையும் பெறுவார் என் அபிம்ான புத்திரன்போல் வயது முதிர்ந்த எனக்கு நான் ஏவும் சில செயல்களைச் செய்து உதவுவார். அவர் பட்டம் பெறுவதற்குமுன் நான் ஒய்வு பெற்றுவிட்ட படியால் அவரை நான் என் கீழ் விரிவுரையாளராகச் சேர்த்துக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. இல்ல்ையென்றால் திருப்பதிப் பல்கலைக் கழகத்தில் பன்னி யாற்ற வேண்டியவர். எனக்குப் பின்னர் ஏற்பட்ட விரும்பத்தகாத சூழ்நிலையில் இவர் அங்குப் பணியாற்ற ஏழுமலையானே விரும்பவில்லை என்று நினைத்துக் கொண்டேன். இறையருளால் என் சிறு ஆதவியால் 1979 முதல் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் முதுநிலை ஆய்வாளராகப் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. தமிழ் உணர்வும் உழைப்பின் சின்னமாகவும் ருந்த முதல் இயக்குநர் திரு. ச. வே. சுப்பிரமணியன் இவருக்கு நல்ல