பக்கம்:புது டயரி.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எழுதுகோலின் அவதாரம்

93

 அதில் தோய்த்துத் தோய்த்து எழுதுவார்கள். அந்த மைக் கூடு சமதர்ம மைக்கூடாக இருக்கும். யார் பொருளாவது பலருக்குப் பயன்பட்டால் அதை “ஜமாபந்தி மைக்கூடு” என்று சொல்வார்கள்.

எழுதுகோல் பேனா வடிவம் மாத்திரமா எடுத்தது? பென்சில் வடிவமும் எடுத்தது. காகிதத்தில் எழுதுவது. காகிதப் பென்சில். சிலேட்டில் எழுதுவது சிலேட்டுப் பென்சில். அதற்குச் சிலேட்டுக் குச்சி, பலப்பம் என்றும் திருநாமங்கள் உண்டு. பள்ளிக்கூடத்துப் பையன் நீளமான சிலேட்டுக்குச்சி வாங்கி அதைச் சின்னச் சின்னதாக ஒடித்து வைத்துக் கொள்வான்; தன்னிடம் நிறையப் பென்சில்கள் இருப்பதாய்ப் பெருமையடித்துக் கொள்வான். காகிதப் பென்சிலில், கறுப்புப் பென்சில், காப்பியிங் பென்சில் என்று இரண்டு வகை உண்டு. பெருமாள் செட்டி காப்பியிங் பென்சில் என்றால் அந்தக் காலத்தில் மகிமை அதிகம்.லேசில் தேயாது. பல வருஷங்களுக்கு வைத்துக்கொள்வார்கள். சிவப்புப் பென்சில், லேப் பென்சில்களை வாத்தியார்கள் மார்க்குப் போட வைத்துக்கொள்வார்கள். ஒரு பக்கம் சிவப்பும் மற்றொரு பக்கம் நீலமும் இணைந்த பென்சில்களும் உண்டு.

பிறகு வந்தது ஊற்றுப் பேனா(Fountain Pen). ஊற்றுப் பேனாவில் எழுதுவது ஒரு காலத்தில் கெளரவம். இப்போதெல்லாம் ஊற்றுப் பேனா என்று யார் சொல்கிறார்கள்? பேனா என்றாலே ஊற்றுப் பேனாத்தான். முதல் வகுப்புப் படிக்கிற பையன் முதல்கொண்டு பேனாவில்தான் எழுதுகிறான். தனியே மைப்புட்டியை நாடாமல் தன் வயிற்றுக்குள்ளே மையை அடக்கிக் கொண்ட பேனா எழுதுவதற்கு எவ்வளவோ எளிதாக இருக்கிறது.

பேனாக்களில்தான் எத்தனே வகைகள் வந்துவிட்டன! கழுத்தைத் திருகி மையைப் போட்டுக்கொள்ளும் பேனாக்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/100&oldid=1151478" இலிருந்து மீள்விக்கப்பட்டது