பக்கம்:புது டயரி.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

புது டயரி

 மறைந்து வருகின்றன. பின்னாலே பம்பை வைத்து மைப் புட்டியில் வைத்துப் பம்பை இயக்கி உறிஞ்சும்படி உள்ள பேனாக்களே இப்போது அதிகம். பின்புறத்தைத் திருகி மையை உறிஞ்சச் செய்யும் பேனாவும் இருக்கிறது. பால் பாயிண்ட் பேனா வேறு வந்திருக்கிறது.

நான் முதல் முதல் ஊற்றுப் பேனா வாங்கினபோது எனக்கு உண்டான மகிழ்ச்சிக்கு அளவில்லை. என்னுடைய நண்பருக்குப் பக்கம் பக்கமாக அதைக் கொண்டு கடிதம் எழுதினேன். கவிதைகள், கட்டுரைகள் எல்லாம் ஆவேசத்தோடு எழுதினேன். வெள்ளைத்தாளில் பேனா இயங்குவதைப் பார்த்தால் வெண் பளிங்கு மேடையில் குதிரை ஓடி வருவது போல அல்லவா இருக்கிறது?

ஆனால் பம்ப் பண்ணுகிற பேனாவில் ஒரளவுதான் மை பிடிக்கிறது. ஏதாவது சுவாரசியமாக எழுதிக்கொண்டிருக்கும்போது பேனாவில் மை ஆகிவிட்டால் எவ்வளவு கோபம் வருகிறது தெரியுமா? அதை ஒடித்துப் போட்டு விடலாமா என்று எரிச்சல் உண்டாகிறது. மைக் கூட்டைத் தேடிப் பேனாவை நிரப்பிக் கொள்வதற்குள் நமக்கு இருந்த கற்பனை வேகம் போய்விடுகிறது. சேர்ந்தாற்போலச் சில மணிகள் எழுதுவதற்கு இந்தப் பேனாக்கள் பயன்படுவதில்லை. அதற்காக மைப்புட்டியையே பேனாவில் கட்டிக் கொள்ள முடியுமா?

என்னுடைய எழுத்து அவ்வளவு மோசமானது அல்ல. நன்றாக இருக்கிறது என்று சிலர் சொல்வார்கள். அழகாக இருக்கிறது என்று சிலர் பாராட்டுவார்கள். மற்றவர்கள் பாராட்டுகிறார்களோ இல்லையோ, என் மனைவி, “ரொம்ப அழகாக இருக்கிறது” என்று பாராட்டுவாள். அவளுக்கு எத்தனை கடிதங்கள் எழுதியிருக்கிறேன்! அவளும் எனக்கு எழுதுவதுண்டு. அவள் எழுத்து எனக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/101&oldid=1151518" இலிருந்து மீள்விக்கப்பட்டது