பக்கம்:புது டயரி.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்ணுக்கு அணிகலன்

107

 “வராது” என்று டாக்டர் சொல்லிவிட்டார். ஒரு கால் அது வந்தால் வேறு கண்ணாடி போடவேண்டுமோ என்ற பயத்தினால் அப்படிக் கேட்டேன்.

சாலேசரத்தைப் பற்றி எண்ணும்போது எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது.

ஒரு வீட்டுக்குப் புதியதாக ஒரு குடும்பம் குடி வந்தது. அந்தக் குடும்பத்தில் ஒரு கிழவர். அவர் நாள்தோறும் இராமாயணம் பாராயணம் பண்ணுகிறவர். அவருடைய சாலேசரக் கண்ணாடி கெட்டுப் போயிற்று. தம் பிள்ளையிடம், “அடே, கண்ணாடி வாங்கிக் கொண்டு வாடா! புத்தகம் தெரியவில்லை. படிக்கவேண்டும்” என்றார், அடிக்கடி அவர் சொல்லியும் அவர் மகன் வாங்கி வரவில்லை. பிறகு ஒருநாள் வாங்கி வந்தான். அதைப் போட்டுக் கொண்டு அவர் வாய்விட்டு இராமாயணத்தைப் படித்தார். “அப்பாடி கண்ணாடி போட்ட பிறகுதானே எழுத்துப் புரிகிறது?” என்று சொல்லிப் படித்தார்.

பக்கத்து வீட்டில் இருந்த ஒருவனுக்கு இந்தக் கிழவர் கண்ணாடி இல்லாமல் பரிதவித்ததும், கண்ணாடி வந்த பிறகு, படித்து மகிழ்வதும் தெரிந்தன. அவன் ஒரு கண்ணாடிக கடைக்குப் போனான். “ஒரு கண்ணாடி எடுங்கள், படித்துப் பார்க்கிறேன்” என்றான். கடைக்காரர் அவனுக்குச் சாலேசரம் என்று எண்ணி ஒரு கண்ணாடியைக் கொடுத்து ஒரு புத்தகத்தையும் கொடுத்தார். அந்த ஆள் கண்ணாடியைப் போட்டுக்கொண்டு புத்தகத்தை எடுத்துப் பார்த்தான்.

“தெரியவில்லையே!” என்றான்.

கடைக்காரர் வேறு கண்ணாடி கொடுத்தார். அதைப் போட்டுக்கொண்டு பார்த்தான். அப்போதும், “தெரிய வில்லையே!” என்றான். கடைக்காரர் பெரிய எழுத்துப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/114&oldid=1151583" இலிருந்து மீள்விக்கப்பட்டது