பக்கம்:புது டயரி.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

என் புத்தகங்கள்

111

 ஆயிரம் தல வாங்கிய அபூர்வ சிந்தாமணி, இரத்தினபுரி ரகசியம், மின்சார மாயவன், தாசி தையல் நாயகியின் சமர்த்து — இப்படியெல்லாம் பல நாவல்கள் இருந்தன.

விவேக சாகரம் என்று ஒரு புத்தகம். அந்தப் புத்தகத்தை இப்போது அச்சிட முடியாது. பச்சைச் சிங்காரம் அது. எட்டையாபுரத்தில் இருந்த முஸ்லீம் ஒருவர் எழுதினது அது. நடை கடுமையான பண்டிதர் நடை.

ஒரு பிராம்மணன் நான்கு வேதங்களும் கற்றுக் கொள்கிறான். இடையிலே அவனுக்குக் கல்யாணமாகிறது. வேதங்களை அத்தியயனம் செய்து விட்டு வீட்டுக்கு வருகிறான். மனைவியோடு வாழலாம் என்று வருகிறான். அவன் மனைவி ஒரு கள்ளப் புருஷனை வைத்துக்கொண்டிருக்கிறாள். தன் கணவனிடம், “நான்கு வேதந்தானே கற்றிருக்கிறீர்கள்? ஐந்தாம் வேதமும் கற்றுக் கொண்டு வாருங்கள்” என்று சொல்லி அனுப்பி விடுகிறாள். அந்த அப்பாவிப் பிராம்மணனும் அதை உண்மையென்று நம்பிப் புறப்பட்டு விடுகிறான். சில பெண்களைச் சந்தித்துத் தான் ஐந்தாம் வேதம் கற்றுக் கொள்வதற்கு வந்திருப்பதாகவும் அதற்குரிய குருவைத் தேடிக் கொண்டிருப்பதாகவும் சொல்கிறான். அந்தப் பெண்கள் தாங்களே ஐந்தாம் வேதத்தைக் கற்றுத் தருவதாகச் சொல்கிறார்கள்.

ஒவ்வொருத்தியும் வெவ்வேறு வகையான தந்திரம் செய்து தன் கணவன் இருக்கும்போதே அந்தப் பிராம்மணனோடு இன்புறுகிறார்கள். “இதுதான் ஐந்தாம் வேதம்” என்கிறார்கள். இப்படி ஐந்து பேர் ஐந்து வகையில் அவனுக்குக் கற்றுக் கொடுக்கிறார்கள். இடையில் பல உபகதைகள். எல்லாம் பச்சை பச்சையான செய்திகள்.

இந்தக் கதையைச் சொல்வதுதான் விவேகசாகரம் அந்தப் பிராம்மணன் பெற்றுக்கொண்ட விவேகம், முறை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/118&oldid=1152379" இலிருந்து மீள்விக்கப்பட்டது