பக்கம்:புது டயரி.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114

புது டயரி

 எந்த நூலைப் படித்தாலும் அதில் அடையாளம் செய்து படிப்பவர்கள். அவர்களுக்கென்று சில சங்கேதங்கள் உண்டு. நல்ல பாடல்களாக இருந்தால் அதன் பக்கத்தில் ஒரு சுழி போட்டிருப்பார்கள். அது பாடம் பண்ணத் தக்க பாட்டு என்று பொருள். சில இடங்களில் ஒரு புள்ளி, இரண்டு புள்ளி, மூன்று புள்ளிகள் இருக்கும். ஒரு புள்ளி இருந்தால் அந்த வரியில் சிந்திப்பதற்குரிய கருத்து ஒன்று இருக்கிறது என்று பொருள். மூன்று புள்ளிகள் இருந்தால் அங்கே மூன்று கருத்துக்கள் கவனிப்பதற்குரியவையாக இருக்கும். சந்தேகமுள்ள இடங்களில் — என்று சிறு கோடு இட்டிருப்பார்கள். பல இடங்களில் பாட்டின் ஒரு பாதியையோ, முழுப்பாட்டையோ பக்கத்தில் கெட்டையாகக் கோடிட்டிருப்பார்கள். அவை முக்கியமான பகுதிகள். சில இடங்களில் அடிக்கோடிட்டிருப்பார்கள். படிக்கிறவர்கள் படித்து அடையாளம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்துவார்கள். அவர்கள் ஏதாவது நமக்கு அறிவிக்க வேண்டுமானல், “அதோ அந்தப் புத்தகத்தை எடு; வலப்பக்கத்தில் மேலே அடையாளம் செய்திருக்கிறேன், அதைப் படி” என்பார்கள். அங்கே நமக்கு வேண்டிய கருத்தோ, மேற்கோளோ கிடைக்கும். அவர்கள் ஒன்று சொல்வதுண்டு; “நான் இறந்தால் மறுபடியும் தமிழ் நாட்டில்தான் பிறப்பேன். தமிழ் நூல்களைக் கற்பேன். ஆனால் நான் அடையாளம் இட்டு வைத்த இந்தப் புத்தகங்கள் எனக்குக் கிடைக்குமா?” என்று வருந்துவார்கள். தாம் படித்துக் குறிகளிட்ட புத்தகமென்றால் அதற்குத் தனி மதிப்பு, புழங்கின பாத்திரம் மாதிரி, அந்தப் பழக்கத்தை அவர்களிடம் நானும் கற்றுக் கொண்டிருக்கிறேன். எதைப் படித்தாலும் அடையாளம் செய்து படிப்பேன். பிழை இருந்தால் திருத்திக் கொண்டு படிப்பேன். சில புத்தங்களைப் பார்த்தால் ‘புரூப்’ திருத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/121&oldid=1152383" இலிருந்து மீள்விக்கப்பட்டது