பக்கம்:புது டயரி.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130

புது டயரி


ஐயரவர்கள் கையில் காலணா எட்டணா எடுத்துக் கொண்டு செல்வார்கள். அந்த இட்டிலிக் கூடைக்காரிக்கு முன்போய் நிற்பார்கள். அப்போது ரிக்க்ஷாக்காரர்களெல்லாம் அவர்களைச் சுற்றி மொலுமொலுவென்று மொய்த்துக் கொள்வார்கள். அந்தக் கூடைக்காரியிடம் ஆளுக்கு இரண்டு இட்டிலி கொடுக்கச் சொல்வார்கள். அப்போதெல்லாம் இட்டிலி காலணா விலை. எல்லாரும் வாங்கிக்கொண்ட பிறகு கணக்குப் பண்ணிப் பணத்தை இட்டிலிக்காரியிடம் கொடுத்து விடுவார்கள். இதனால் அந்தக் கிழவிக்கு வியாபாரம்; ரிக்க்ஷாக்காரர்களுக்கு ஓரளவு காலை உணவு. ஐயரவர்கள் பணத்தைக் கொடுத்துவிட்டு ஜபமாலையுடன் மேற்கு வீதியில் திரும்பும்பொழுது அந்தக் கிழவி, “மகராஜன் நல்லா இருக்க வேணும்!” என்று வாழ்த்துவாள். ஆண்டவனப் பிரதட்சிணம் பண்ணின பலன், உலாத்தின பயிற்சி என்று இரட்டை லாபம் உண்டு. அந்த இட்டிலிக் காரிக்கு வியாபாரம், ரிக்க்ஷாக்காரர்களுக்குச் சிற்றுண்டி என்று வேறு வகையிலும் இரட்டை லாபம் கிடைக்கும்.

வெளியூர்களுக்குப் போனால் அவர்கள் நெடுந்துாரம் நடப்பார்கள். அவர்களோடு அப்போது போனால் எத்தனயோ அருமையான இலக்கிய நுட்பங்களும் வாழ்க்கை அநுபவங்களும் கேட்கலாம்.

அந்தக் காலத்திலெல்லாம் எனக்கு நடந்து பயில வேண்டும் என்ற எண்ணம் எழவே இல்லை. சில முக்கியமான காரியங்களுக்காகச் சில சமயங்களில் ஒரேயடியாகப் பல மைல்கள் என் இளம் பிராயத்தில் கடந்திருக்கிறேன். இப்போது நினைத்துக் கொண்டாலும், ‘நாமா அப்படி நடந்தோம்?’ என்று ஆச்சரியமாக இருக்கிறது.

ஒரு காலத்தில் என்னுடைய உள்ளத்தில் துறவி ஆக வேண்டும் என்ற ஆசை உண்டாகி வளர்ந்து வந்தது. அப்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/137&oldid=1152932" இலிருந்து மீள்விக்கப்பட்டது