பக்கம்:புது டயரி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



குடைப்புராணம்

“எத்தனை தடவை சொன்னலும் இந்த வீட்டில் யாரும் காதில் போட்டுக் கொள்வதே இல்லை. மழை இல்லாத காலத்தில் இந்தக் குடைகளை ஒக்கப் பண்ணவேனும் என்று தலை தலையாய் அடித்துக் கொண்டேன். யார் கேட்கிறார்கள்?” என்று இரைந்தேன்.

அலுவலகத்துக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தேன். திடீரென்று மழை வந்துவிட்டது. மழைக் காலத்தில் மழை வராமல் என்ன செய்யும்? ‘நான் அலுவலகம் போகிற வரைக்கும் நில்’ என்றால் நிற்குமா? கம்பர், யாரோ வேலி என்ற பெண்ணுக்காக ஒரு சுவர் வைத்தாராம். தம்மை மறைத்துக் கொண்டு கூலி வேலை செய்ய முனைந்தபோது கடந்தது இது. எவ்வளவு தண்ணீர் விட்டு மண்ணைக் குழைக்க வேண்டும் என்பது அவருக்கு எப்படித் தெரியும்? மண்ணை எடுத்துச் சுவராக வைக்க வைக்க அது சரிந்து கொண்டே வந்தது. ‘வேலி தரும் கூலி, நெற்கொண்டு போமளவும் நில்லாய் நெடுஞ் சுவரே!’ என்று பாடினாராம். சுவர் நின்று விட்டதாம். நான் என்ன கம்பரா? ‘அலுவலகம் போகுமட்டும் நில்லாய் அருமழையே’ என்று பாடத் தெரியும். ஆனால் என் பாட்டுக்கு அது நிற்குமா? அது தன்பாட்டுக்குப் பெய்துகொண்டுதானே இருக்கும்?

எங்கள் வீட்டில் ஐந்து குடைகள் இருந்தன. ஒன்றாவது ஒழுங்கானபடி இல்லை. இரண்டில் ஒரு கம்பி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/19&oldid=1149406" இலிருந்து மீள்விக்கப்பட்டது