பக்கம்:புது டயரி.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

188

புது டயரி


செறிவை அளவெடுத்து விடலாம். குறட்டை நின்றால் தூக்கத்தின் மயக்கம் சிறிது குறைந்திருக்கிறதென்று தெரிந்து கொள்ளலாம். குறட்டை விடுவதில்தான் எத்தனை விதமான பேதங்கள்! சிலபேர் ராக ஆலாபனை மாதிரி நீண்டு குறட்டை விடுவார்கள். சிலபேர் துரிதகால சுரம்போல ஒலியெழுப்புவார்கள். சிலர் குறட்டை விடும்போது மோட்டார் சைக்கிள் விடுவதுபோல இருக்கும். அம்மியில் அரைப்பது போன்ற ஒலியை எழுப்புகிறவர்களும் இருக்கிறார்கள்.

என்னுடைய இளம் பிராயத்தில் எனக்கு உண்டான அநுபவத்தைச் சொல்கிறேன். நான் ஒர் ஊருக்குப் போயிருந்தேன். அந்த ஊரில் திருடர் பயம் அதிகம் என்று கேள்விப் பட்டிருந்தேன் இராத்திரி நான் படுத்துத் தூங்கினேன். நள்ளிரவில் ஏதோ சத்தம் கேட்டு விழிப்புக் கொடுத்தது. கரகர என்ற ஒலி கேட்டது. பிறகு கடுக்கடுக் என்ற தொனி வந்தது. யாரோ திருடர்கள் வந்து கன்னம் போடுகறார்கள் என்றே எனக்குப் பட்டது. நடுநடுவிலே கிசுகிசு கிசுகிசு என்ற ஓசை கேட்டது. இரண்டு மூன்று திருடர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்கிறார்கள், இரகசியமாக என்று எண்ணினேன். சிறுபிள்ளை நான். எனக்குப் பயம் பிடித்துக் கொண்டது. யாரையாவது எழுப்பலாம் என்றால், அந்தத் திருடர்கள் என்னை அமிழ்த்தி வாயில் துணி அடைத்து விட்டால் சத்தம் கேட்கக் கேட்க என் வயிறு குழம்பிக் கொண்டே இருந்தது. ‘நிச்சயமாகத் திருடர்கள் கன்னம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்; விடியற்காலையில் என்ன என்ன திருட்டுப் போயிற்றென்று தெரியவரும்’ என்று எண்ணிப் பலமாக மூச்சுக்கூட விடாமல் படுத்திருந்தேன். எப்போதப்பா விடியும் என்று காத்திருந்தேன்.

விடிந்தது. அந்த வீட்டில் இருந்த என் நண்பனாகிய சிறுவனிடம், “இராத்திரி திருடன் வந்தானா? என்ன திருட்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/195&oldid=1153270" இலிருந்து மீள்விக்கப்பட்டது