பக்கம்:புது டயரி.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தூங்குகிற சுகம்

189

 டுப் போயிற்று?” என்று கேட்டேன். அவன் திருதிரு வென்று விழித்தான். “நீ என்ன சொல்கிறாய்? திருடன் வருகிறதாவது” என்றான். “பின்னே இராத்திரி கன்னம் போடுகிற சத்தமும் கிசுகிசு என்று பேசுகிற சத்தமும் கேட்க வில்லையா?” என்றேன். அவன் சற்று நிதானித்தான். பிறகு, இடியிடி என்று சிரித்தான்.

“எங்கள் மாமா ஊரிலிருந்து வந்திருக்கிறார். அவர் போட்ட குறட்டையைக் கேட்டு நீ பயந்து போயிருக்கிறாய்” என்று அவன் கூறியபோதுதான் எனக்கு உண்மை விளங்கிற்று. ‘அப்படி எப்படி அவரால் இடைவிடாமல் நிதானமாகக் குறட்டை விடமுடிகிறது?’ என்று நினைத்தேன்.

குறட்டை விடுபவர்களின் மனைவிமார் இரவு நேரங்களில் மிகவும் துன்பப்படுவார்கள் என்று நினைத்திருந்தேன். குறட்டை விடும் நண்பர் ஒருவரையே கேட்டேன். “ஏன் ஐயா, உம்முடைய குறட்டையைச் சகித்துக்கொண்டு எப்படி ஐயா உம்முடைய மனைவி துரங்குகிறாள்?” என்றேன். அவர் என்ன சொன்னார் தெரியுமோ? “ஆரம்ப காலத்தில் கொஞ்சம் கஷ்டப்பட்டாள். பிறகு பழகிவிட்டது. அது மட்டுமல்ல. இப்போதெல்லாம் நான் குறட்டை விட்டால்தான் அவளுக்கு நன்றாகத் தூக்கம் வருகிறதாம்!” என்றாரே பார்க்கலாம். இவர்கள் அல்லவா உண்மையான வாழ்க்கைத் துணைவர்கள்?

தூக்கம் வருவதற்காக எத்தனையோ விதமான மருந்துகள் வந்திருக்கின்றன. வாழ்க்கையில் அளவுக்கு மிஞ்சிய சுறுசுறுப்புள்ளவர்களுக்கு உறக்கம் எளிதில் வருகிறதில்லை. அவர்களின் கெடுபிடியால் தாக்கம் அவர்களை விட்டு எங்கேயோ ஓடி விடுகிறது. அத்தகைய பெரிய மனிதர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/196&oldid=1153272" இலிருந்து மீள்விக்கப்பட்டது