பக்கம்:புது டயரி.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தலையும் தவலையும்

195

 விட்டது. அந்தத் தவறு எப்படியோ இரண்டு முறை என் கண்ணிலும் உதவியாசிரியர் கண்ணிலும் படாமல் போய் விட்டது. ‘பாரம் புரூப்’ வந்தபோதுதான் கண்ணில் பட்டது. அப்போதும் படாமல் இருந்தால் என்ன ஆகியிருக்கும்?

நான் எழுதிய புத்தகம் ஒன்றில் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன் என்ற சேர மன்னனைப் பற்றிய செய்தி வருகிறது. அவனுக்கு வானவரம்பன் என்பது ஒரு சிறப்புப் பெயர். அவனுடைய புகழும் ஆணையும் வானம் வரையில் சென்றவை என்ற கருத்தையுடையது அந்தப் பெயர். புத்தகத்தை என் நண்பர்களும் நானும் ‘புரூப்’ பார்த்தோம். புத்தகம் வெளியாயிற்று அதைப் புரட்டிப் பார்த்தேன். வானவரம்பன் என்ற பெயர் எப்படி மாறியிருந்தது தெரியுமா? வானர வம்பன் என்று இருந்தது! வான வரம்பன் எங்கே வானர வம்பன் எங்கே? இரண்டு எழுத்துக்கள் இடம் மாறி விட்டதனதால் இந்த விபரீதம் நேர்ந்துவிட்டது.

மலையாளத்தில் ஒரு பழமொழி உண்டாம். ‘மூணாம் முறை பகர்த்தும் போழ், ஸமுத்ரம் மூத்ரமாகுன்னு’ என்பது அது. ‘மூன்ரும் முறை எழுதும்போது ஸமுத்ரம் மூத்ரமாகும் என்பது பொருள். ஏட்டுச் சுவடியைப் பார்த்து ஒருவன் பிரதி பண்ணினான். அதில் ஸமுத்ரம் என்ற வார்த்தை இருந்தது. எழுதுகிற வேகத்தில் அவன் ‘ஸ’கரத்தை விட்டு விட்டு முத்ரம் என்று எழுதிவிட்டான். அந்தப் பிரதியைப் பார்த்து மற்றொருவன் படியெடுத்தான். அவன் முத்ரம் என்ற வார்த்தையைப் பார்த்தான். அப்படி ஒரு வார்த்தை இல்லையே என்று மூத்ரம் என்று எழுதி விட்டான். மூலப்பிரதி ஒன்று, படியெடுத்த பிரதிகள் இரண்டு. மூலத்தில் ஸமுத்ரமாக இருந்தது மூன்றாவது அவதாரத்தில் மூத்ரமாகிவிட்டது. இரண்டும் உப்புநீர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/202&oldid=1153377" இலிருந்து மீள்விக்கப்பட்டது