பக்கம்:புது டயரி.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

புது டயரி

 எனக்குத் தோன்றும். “இந்த நர்ஸிங்ஹோம் அநுபவம், எப்படி இருக்கும்? நம் கையைக் கட்டிப் போட்டு ஸ்லைன் ஏற்றினால் நம்மால் தாங்க முடியுமா?” என்று எண்ணியிருக்கிறேன்.

நான் முருகனை வழிபடுகிறவன். என்னுடைய வேண்டுகோளிற் பலவற்றை அவன் நிறைவேற்றி வருகிறான். அந்த அருளாளன், என் எண்ணத்தை அறிந்து, உன் எண்ணப்படியே இந்த அநுபவத்தை நீயே அடைந்து பார் என்று கருணை பாலித்தான் போலும் ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால், டாக்டர் பல சோதனைகள் செய்து என் உடம்பில் அடிப்படையான கோளாறு ஏதும் இல்லை என்று சொல்லிவிட்டார். இரத்த பரிசோதனை செய்தார்; அதில் சர்க்கரை இல்லை; வேறு குற்றம் இல்லை. நீர் பரிசோதனை ஆயிற்று; அதிலும் ஒரு குறையும் இல்லை. இரத்த அழுத்தம் அளவுக்கு மிஞ்சி இல்லை; குறைவும் இல்லை. இதய நிபுணர் வந்து பார்த்தார்; ஒன்றுமே இல்லை என்று சொல்லி விட்டார். மற்றத் துறையினர் செய்த சோதனையினால் கிடைக்காத மகிழ்ச்சி, இதய நிபுணர் சோதனையின் முடிவு தெரிந்தவுடன் எனக்கும் என் குடும்பத்தாருக்கும் ஏற்பட்டது.

இப்போது வயசானவர்களுக்குத் திடீர் திடீரென்று இதயநோய் வருகிறது. எனக்கு அப்படி ஏதாவது வருமோ என்று என் மனைவி மக்கள், பயந்தனர். அப்படி ஒன்றும் இல்லை என்று அறிந்து அவர்கள் ஆறுதல் பெருமூச்சு விட்டார்கள். எனக்கு மகிழ்ச்சி உண்டானதற்கு அது காரணம் அன்று. என் இதயத்தில் தீங்கு இல்லை; நான் நல்ல இதயம்,படைத்தவன் என்று டாக்டர். சொல்லிவிட்டதில் எனக்கு அளவற்ற திருப்தி எனக்கு மற்றப்பலத்தைப் பற்றி அவ்வளவு அக்கறை இல்லை. படிப்பைப்பற்றி பணத்தைப்பற்றிக் கவலை இல்லை. வல்லவனாக இருக்க

  • * *
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/47&oldid=1149564" இலிருந்து மீள்விக்கப்பட்டது