பக்கம்:புது டயரி.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

புது டயரி

 அந்தப் பெரியவர். அவர் சொல்வதில் நியாயம் இருக்கிறது என்பதை உணர்ந்தேன்.

‘காலையில் எழுந்தவுடன் படிப்பு’ என்று பாப்பாவுக்குப் பாரதி பாடியிருக்கிறார், காலையில் எழுந்தவுடன் காபி என்று அவர் பாடியிருக்க வேண்டும். ஒருகால் அப்படித்தான் எழுதி மறுபடியும் திருத்தியிருக்கலாம். காலையில் காபி இல்லாவிட்டால் நம்முடைய முகத்தில் அசடு வழியும். சில பேருக்குக் கோபம் பொங்கும். வீட்டில் உள்ள இல்லத்தரசிகளுக்குக் காபி இருந்தால் போதும்; சாப்பாடுகூட வேண்டாம்; மங்குமங்கென்று வேலை செய்வார்கள். -

என்னுடைய மாமா வீட்டில் சிலகாலம் இருந்து படித்து வந்தேன். என் தாயைப் பெற்ற பாட்டி இருந்தாள். அவளுக்குக் காலையில் காபி வந்தால்தான் உயிரே வரும். மாட்டுப் பெண்ணிடம் கேட்க மாட்டாள். பயமோ, கவுரவமோ தெரியாது. குறிப்பிட்ட நேரத்தில் அவளுக்குக் காபி கொடுக்காவிட்டால் பாத்திரம் உடைபடும். அவள் வாய் புலம்பிக் கொட்டும். ஒரு தம்ளர் காபி உள்ளே போனால்தான் ஆவேசம் அடங்கும். இப்படி அநேகமாக எல்லார் வீட்டிலும் நடக்கும் என்றே நான் நினைக்கிறேன்.

காபி சாப்பிடாவிட்டால் தலைவலி வந்துவிடும். இந்தக் காபிக்கும் தலைவலிக்கும் என்ன சம்பந்தம்? ஒருகால் மூளை மக்கர் பண்ணி அதனால் தலைவலி வந்து விடுகிறதோ? வைத்திய சாஸ்திரம் என்ன காரணம் சொல்லுமோ தெரியாது. தலைவலிக்கும் காபிக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிறது. காபி இல்லாவிட்டால் தலைவலி வருகிறது. ஆனால் தலைவலி வந்தபோதெல்லாம் காபி குடித்தால் போய்விடுமா? காபி சாப்பிடாமல் வரும் தலைவலிக்குத்தான் அது மருந்தே ஒழிய மற்றத் தலைவலிகளுக்கு அது மருந்து ஆகாது. அப்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/51&oldid=1149573" இலிருந்து மீள்விக்கப்பட்டது