பக்கம்:புது டயரி.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஞான தீர்த்தம்

45

 படியிருந்தால் அமிர்தாஞ்சனத்தைத் தேட வேண்டியதில்லையே!

பல பேருக்குக் காபி சாப்பிடாவிட்டால் குடல் வேலை செய்யத் தொடங்குவதில்லை; காலையில் அது சுத்தமானால் தானே வேலைகளைச் சரிவரச் செய்யலாம்? அதற்காகக் காபியை விளக்கெண்ணெய்க்குச் சமானம் என்று சொல்லி விடலாமா? அது அமிர்தம் அல்லவா? சில விசேஷ காலங்களில் அது தலைவலி மருந்தாகப் பயன்படுகிறது; சில சமயங்களில் விளக்கெண்ணெய் வேலையைச் செய்கிறது; அவ்வளவுதான்.

காபி என்றால் எல்லா ஊர்க் காபியும் ஒன்றாகிவிடுமா? ‘பிளாக் காபி’ என்று வெறும் டிகாக்ஷனைக் குடிக்கிறார்களாம், அமெரிக்காவில். பிராங்க்ளின் என்ற அமெரிக்க அறிஞர் ஒருவர் பாரிஸ் மாநகரில் நடைபெற்ற உலகத் தமிழ் மகாாட்டில் பேசினார். அப்போது தமிழ் நாட்டில் அவர் பெற்ற அநுபவத்தைச் சொல்கையில், “காரைக்குடியில் பிராமணர்கள் காபியைப்போல எங்கும் பார்த்ததில்லை” என்று சொன்னார். கறுப்புக் காபியைக் குடிக்கும் அந்த அமெரிக்கருக்கல்லவா தெரியும் தமிழ் காட்டுக் காபியின் அருமை?

அப்போதே காபிக் கொட்டையை வறுத்து அப்போதே அரைத்து டிகாக்ஷன் இறக்கி நல்ல கெட்டியான பாலில் அதை விட்டு அளவாகச் சர்க்கரை போட்டுச் சாப்பிட்டால்... ஆ! அமிர்தம் என்று புராணத்தில் கேட்கிறோம்; அதற்கு ஈடாகுமா? அதை ஆற்றும்போதே அதன் நறுமணம் எவ்வளவு இனிமையாக இருக்கிறது! தமிழ் நாட்டுக் காபி ஒர் உணவு, நாவுக்குச் சுவையானது; மூக்குக்கு மணமானது; வயிற்றுக்கு நிறைவானது; மூளைக்குச் சுறுசுறுப்பு ஊட்டுவது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/52&oldid=1149574" இலிருந்து மீள்விக்கப்பட்டது