பக்கம்:புது டயரி.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பட்டிமண்டபம்

கடந்த சில ஆண்டுகளாகப் பட்டிமண்டபம் என்ற நிகழ்ச்சி பிரபலம் அடைந்து வந்திருக்கிறது. கவியரங்கம், கருத்தரங்கம் ஆகியவற்றுக்குக் கூடுகிற கூட்டத்தைவிடப் பட்டிமண்டபத்துக்கு ஏராளமாகக் கூட்டம் வருகிறது. கட்சி கட்டிக்கொண்டு பேச்சாளர்கள் வாதம் செய்யும் போது கோழிச் சண்டை, ஆட்டுக்கிடாய்ச் சண்டைகளைப் பார்க்கிறவர்களுக்கு உள்ள உற்சாகம் அவையினருக்கு உண்டாகிறது.

முதல் முதலாகக் காரைக்குடிக் கம்பன் விழாவில் தான் பட்டிமண்டபம் தொடங்கியது. முதலில் ஒரே தலைப்பில் கருத்துக்களை வெவ்வேறு பேச்சாளர்கள் பேசினார்கள். பிறகு விவாத அரங்காகப் பட்டிமண்டபம் மாறியது. அப்போத்தான் அதற்குச் சூடு பிடித்தது. முதலில் இரண்டு கட்சிகள் வாதம் செய்தன; பிறகு மூன்று கட்சிகள் வந்தன; அப்பால் நான்கு கட்சிகள் வந்தன. அப்பீல் கோர்ட்டுக்கூடக் காரைக்குடிப் பட்டிமண்டபத்தில் வந்திருக்கிறது.

இந்த நிகழ்ச்சி இப்போது எங்கும் பரவியிருக்கிறது. எந்த இலக்கிய விழாவானாலும் பட்டிமண்டபம் இல்லாமல் இருப்பதில்லை. பருப்பில்லாமல், பாயசம் இல்லாமல், கல்யாண விருந்து இருக்கலாம்; பட்டி மண்டபம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/59&oldid=1149588" இலிருந்து மீள்விக்கப்பட்டது