பக்கம்:புது டயரி.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பட்டிமண்டபம்

53

 இல்லாமல் இலக்கிய விழா இல்லை; இருந்தால் சுவாரசியப் படுவதில்லை.

பழங்காலத்தில் - அதாவது சங்க காலத்திலேயே பட்டிமண்டபம் இருந்தது. புலவர்கள் கூடி ஆராய்ச்சி செய்யும் மண்டபம் அது. தக்க புலவர்கள் கூடி கடத்தும் அவை அது. இந்திரவிழாவில் ‘பட்டிமண்டபத்துப் பாங்கறிந்து ஏறினர்’ புலவர் என்று மணிமேகலையால் அறிகிறோம். “பட்டிமண்டபம் ஏற்றினை ஏற்றினை” என்று மாணிக்கவாசகர் பெருமிதம் அடைகிறார், “பன்னரும் கலைதெரி பட்டிமண்டபம்” என்று கம்பன் பாடுகிறான். அந்தக் காலத்தில் புலவர்கள் கூடி ஆராய்ச்சி செய்தது பட்டிமண்டபம் என்று இவற்றால் தெரிய வருகிறது. இப்போது விவாத அரங்காக, இலக்கியப் போர்க்களமாக, ஏசல் வீதியாகப் பட்டிமண்டபங்கள் நிகழ்கின்றன.

பட்டிமண்டபம் என்பதிலுள்ள மண்டபம் என்பது வடசொல். அது தனித்தமிழருக்குப் பிடிக்கவில்லை. ஆகவே அதை மன்றமாக்கிப் பட்டிமன்றம் என்று போடுகிறார்கள். இரண்டு சொற்கள் இணைந்து வந்த தொடர் அது. அதில் ஒரு சொல்லை மாற்றிப் பட்டியை மட்டும் அப்படியே வைத்துக்கொண்டது வேடிக்கையாக இருக்கிறது. ஸ்ரீமான் என்பதைத் திருவாளர் என்று தமிழாக மாற்றியவர்கள் ஸ்ரீமதி என்எதில் உள்ள ஸ்ரீயை மட்டும் மாற்றி மதியை அப்படியே வைத்துத் திருமதி என்று வழங்குவதும் இது போன்ற வேடிக்கைதான். திருவாட்டி என்றால் தூய தமிழாக இருக்குமே! இப்போது திருமதி என்று சொல்லியும் எழுதியும் பழக்கத்துக்கு வந்துவிட்டது. நானும் அப்படித்தான் எழுத வேண்டியிருக்கிறது!

இந்தச் சொல்லாராய்ச்சியில் இன்னும் ஒன்று நினேவுக்கு வருகிறது. ‘காந்தியடிகளின் சிலையைத் திறந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/60&oldid=1149590" இலிருந்து மீள்விக்கப்பட்டது