பக்கம்:புது டயரி.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

புது டயரி

 வைத்தார்கள்’ என்ற செய்தி வருகிறது. அங்கே காந்தியடிகளின் . வெண்கலத் திருவுருவத்தைத் திறந்து வைத்திருப்பார்கள். வெண்கலத்தாலோ, வெள்ளியாலோ, செம்பாலோ ஆன எந்தப் படிவத்தையும் இப்போது சிலை என்கிறார்கள். சிலை என்பது கல்லைக் குறிக்கும் சிலா என்ற வடசொல்லின் திரிபு. அது ஆகுபெயராகக் கல்லாலான வடிவத்தைக் குறிக்கும். ஆகவே, சில கல்லாலான வடிவத்துக்குத்தான் பெயர். இப்போது சிலை என்பதற்கு விக்கிரகம் அல்லது வடிவம் என்று பொருள் கொண்டு பொற்சிலை, வெண்கலச் சிலை என்று வழங்குகிறார்கள். கோர்ட்டுக் கச்சேரி என்பது போலக் கற்சிலை என்றும் சொல்கிறார்கள்.

அது கிடக்கட்டும்; பட்டி மண்டபத்துக்கு வருவோம். கம்பன் விழாவில் தொடங்கிய பட்டிமண்டபம் எல்லா விழாவுக்கும் வந்துவிட்டது. ஆனால் கம்பராமாயணப் பட்டிமண்டபம் மாதிரி மற்றப் பொருளைப் பற்றிய பட்டி மண்டபம் சுவைப்பதில்லை. காரணம், இராமாயணக் கதை எல்லாருக்கும் தெரியும். பேசுகிறவர்கள் கருத்தை எடுத்துச் சொல்லும்போது சபையில் உள்ளவர்கள் எளிதில் புரிந்து கொள்வார்கள். “இலக்குவன் அங்கே நின்றுகொண்டிருக்கிறான், குகன் அவனைத்தான் முதலில் பார்த்தான்” என்று ஒருவர் பேசும்போது, “யார் அந்த இலக்குவன்? யார் அந்தக் குகன்” என்று சபையில் உள்ளவர்கள் கேட்க மாட்டார்கள்; யோசிக்க மாட்டார்கள். சிலப்பதிகாரப் பட்டிமண்டபம் நடக்கிறது. “மாடல மறையோன் கோவலனைப் பார்க்கிறான்” என்று ஒருவர் பேசும்போது, “அந்தப் பேர்வழி யார்? மாடல மறையோனாம்! யார் அவர்?” என்று சபையோர்கள் யோசிப்பார்கள். அதற்குள் பேச்சாளர் நெடுந்துாரம் போய்விடுவார். அவர் மாடல மறையோன் இன்னர் என்று விளக்கிவிட்டுக் கருத்தைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/61&oldid=1149591" இலிருந்து மீள்விக்கப்பட்டது