பக்கம்:புது டயரி.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பட்டிமண்டபம்

55

 சொல்லத் தொடங்கினால் அது ஒரு சொற்பொழிவைப் போல ஆகிவிடும். பட்டிமண்டபத்தின் விறுவிறுப்புக் குறையும்; தொய்வு உண்டாகும்; பிறகு பாட்டிமண்டபம் ஆகிவிடும்!

இப்போதெல்லாம் பட்டிமண்டபத்துக்குப் பொருள் கண்டுபிடிப்பது அரிதாக இருக்கிறது. கம்பராமாயணத்தை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்துப் பார்த்து இரண்டு கட்சி, மூன்று கட்சி என்று வைத்து வாதப்பொருளைத் தேர்ந்தெடுத்துப் பேசியாகிவிட்டது. தம்பியரிற் சிறந்தவர் யார், தந்தையரிற் சிறந்தவர் யார், மனைவியரிற் சிறந்தவர் யார், கொடியவர் யார், வீரர் யார் என்றெல்லாம் கேட்டாகிவிட்டது. இராமன் சிறந்தவனா சீதை சிறந்தவளா என்றும் வாதமிட்டாகிவிட்டது. மற்ற விழாக்களில் பட்டிமண்டப விவாதப் பொருள்கள் சில விசித்திரமாக இருக்கின்றன. இன்னும் சில காலத்தில், “சுரைக்காய் ருசியா, வெண்டைக்காய் ருசியா?” என்பது போன்ற வாதம் எழக்கூடும்.

பட்டி மண்டபத் தலைவரை நடுவர் என்று சொல்கிறார்கள். நடுவர் என்றால் நீதிபதிக்குப் பெயர். யமனுக்குக் கூட அந்தப் பேர் உண்டு. சில தலைவர்கள் தம் கருத்தை வற்புறுத்துவதற்காகவே பட்டிமண்டபத்துக்குப் பொருள் கொடுப்பார்கள். இராவணனைப் பாராட்ட வேண்டும் என்பது அவருடைய குறிக்கோளாக இருக்கும். ‘இராவணன் வீரம் மாசற்றதா, இராமன் வீரம் மாசற்றதா?’ என்று வாதமிடச் செய்வார். இராவணன் விரமே சிறந்தது என்று முடிவு கூறுவார்.

“பட்டி மண்டபத்துப் பாங்கறிந்து ஏறுமின்” என்று மணிமேகலை கூறுகிறது. அக்தக்காலப் பட்டி மண்டபம் எப்படி நடந்ததோ தெரியாது. அதற்கு வேண்டிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/62&oldid=1149592" இலிருந்து மீள்விக்கப்பட்டது