பக்கம்:புது டயரி.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

புது டயரி

 விடுகிறார்கள். ஆனால் தாம்பூலத்தோடு போடுகிறவர்கள் அப்படிச் செய்யாமல் ஆவென்று ஆர்வத்தோடு அதை நுகர்கிறார்கள். வாசனைப் புகையிலை, தூள் புகையிலை என்று சிறிதே அந்தப் புகையிலைக்கு அலங்காரம் பண்ணினாலும் மற்றவர்களைப்போல அல்லாமல், அதை அப்படியே வாயிற் போட்டுக் குதப்பும் ரசிகத்தன்மை புகையிலை போடுபவர்களுக்குத்தான் இருக்கிறது. சிலபேர் புகையிலையைக் கையில் வைத்து அமுக்கி நசுக்கிச் சூடேற்றி அந்த ஸ்பரிசத்திலேயே முதல் இன்பம் கண்டு, பிறகு வாயில் போட்டுக் கொள்வார்கள்; அப்போது அந்தப் புகையிலையினிடம் அவர்களுக்கு எவ்வளவு காதல் இருக்கிறது என்பது தெரியவரும். அதற்கு மஸாஜ் அல்லவா செய்கிறார்கள்?

புகையிலை போடுபவர்களே அதிகமாக அதை ரசிப்பவர்கள் என்று சொன்னல் புகை பிடிப்பவர்களுக்குக் கோபம் வரலாம். ஏனென்றால் வரலாற்றைக் கொண்டு பார்த்தால் இந்த நாலாவது முதல் முதலாகச் சுருட்டிப் புகைக்கத்தான் பயன்பட்டது என்று தெரிகிறது. இதை நிரூபிப்பதற்குப் புத்தகங்களையும் வரலாற்றையும் தேட வேண்டாம். புகையிலை என்று உள்ள அதன் பெயரைப் பாருங்கள். அந்தப் பெயரே அது முதல் முதல் புகைக்கும் இலையாகத்தான் வந்திருக்கவேண்டும் என்பதைத் தெளிவாகத் தெரிவிக்கவில்லையா? இப்போது நான் கேட்ட ஒரு கதை ஞாபகத்துக்கு வருகிறது.

ஒரு செல்வர் வெளிநாட்டுக்குப் போனவர் புதிதாகப் புகையிலையையும் தேயிலையையும் வாங்கிக் கொண்டு வந்தார். புகையிலையைச் சுருட்டிச் சுருட்டாக்கி வைத்திருந்தார். தேநீர் உண்ணுவதும் புகை பிடிப்பதும் தெரியாத காலம் அது. செல்வர் தம் சமையற்காரனிடம் தேயிலையைக் கொடுத்து, “இதைக் கொண்டு போய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/71&oldid=1150244" இலிருந்து மீள்விக்கப்பட்டது