பக்கம்:புது டயரி.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாலாவது

63

 தோன்றுகிறது” என்று எழுதிவிட்டார். ஏன் அப்படி எழுதினார் அந்தப் பெண் சிறிது அதிகமாகச் சுண்ணாம்பைக் கொண்டுவந்து தந்துவிட்டாள். இப்படி அளவறியாமல் கொடுப்பவள், வீட்டுச் செலவையும் கணக்காகப் பண்ண மாட்டாள் என்று அவர் தீர்மானம் பண்ணிவிட்டார். அவருடைய தீர்மானத்துக்குக் காரணம் அந்தப் பெண் கொண்டு வந்து அளித்த சுண்ணாம்பு. இதை எண்ணியே, ‘சுண்ணாம்பில் இருக்கிறது சூட்சுமம்’ என்ற பழமொழி எழுந்தது.

புகையிலை வராததற்குமுன் மூன்றாவதாகிய சுண்ணாம்பு போடுவது நின்றுவிட்டது. இப்போதோ நாலாவது வந்து விட்டது. ஆம்: புகையிலைதான் அந்த நாலாவது.

‘சங்கீத வித்துவான்கள் புகையிலை போடுகிறார்களே: புகையிலைக்கும் சங்கீதத்துக்கும் ஏதாவது தொடர்புண்டா?’ என்ற சந்தேகம் எனக்கு எழுந்தது. என் நண்பராகிய சங்கீத வித்துவான் ஒருவரிடமே கேட்டேன். அவர், ‘ஆம்! சாரீரத்தைச் சுத்தப்படுத்துவது புகையிலை, கபம் வந்து அடைக்காமல் அது பாதுகாக்கிறது’ என்றார், அப்படியானால் புகையிலை போட்டால் நல்ல சாரீரம் வருமா? பாட்டுப் பாட முடியுமா?” என்று கேட்டேன். பாட்டுப் பாடச் சுலபமான வழி ஒன்று கிடைக்கும்போது அந்தப் பயிற்சியை மேற்கொள்ளலாமே என்பது என் யோசனை. ஆனால் அந்த நண்பர் புகையிலை போட்டால் சங்கீதம் வரும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது என்றார்.

அந்த நாலாவது சரக்கான புகையிலையை வெவ்வேறு வகையில் ரசிகர்கள் பயன்படுத்துகிறார்கள். மூக்கில் உறிஞ்சும் பொடியாக, புகை பிடிக்கும் சுருட்டாக, தாம்பூலத்தோடு போடும் பொருளாக உபயோகிக்கிறார்கள். மற்ற இரண்டிலும் புகையிலையின் வடிவத்தைச் சிதைத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/70&oldid=1150240" இலிருந்து மீள்விக்கப்பட்டது