பக்கம்:புது டயரி.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

புது டயரி


ஆறுமுகத்தாபிள்ளை என்ற செல்வர் வீட்டில் தங்குவது வழக்கம். ஆறுமுகத்தாபிள்ளைக்கு மகாவித்துவானிடத்தில் தெய்வ விசுவாசம்.

ஒரு சமயம் ஆறுமுகத்தாபிள்ளை, ஒருவரிடம் கடன் வாங்கினார். பத்திரம் எழுதிக் கொடுத்தார். சிலர் சாட்சிக் கையெழுத்துப் போட்டார்கள். அவர்களில் ஒருவர் கும்பகோணத்துக்காரர். அவர் இருந்த தெரு சுண்ணும்புக்காரத்தெரு. அதை நீற்றுக்காரத் தெரு என்றும் சொல்வார்கள். அவர் கையெழுத்திடும்போது, “நீற்றுக்காரத் தெரு என்று போடட்டுமா? சுண்ணும்புக்காரத் தெரு என்று போடட்டுமா?” என்று அருகில் இருந்த மகாவித்துவான் பிள்ளையவர்களைக் கேட்டாராம். அப்புலவர் பெருமான் உடனே, “இரண்டும் வேண்டாம்; “மூணாவது தெரு என்று போடலாமே” என்று சொன்னதைக் கேட்டு யாவரும் சிரித்தார்கள்.

‘சுண்ணாம்பில் இருக்கிறது சூட்சுமம்’ என்று ஒரு பழமொழி வழங்குகிறது. அது எதனால் வந்தது தெரியுமா? ஒரு செட்டியார் வீட்டுப் பெண்ணுக்குத் திருமணத்துக்கு ஏற்பாடு நடந்தது. பிள்ளைவீட்டுக்காரர்கள் பெண்ணைப் பார்க்க வந்திருந்தார்கள். உணவருந்தித் தாம்பூலம் போட்டுக் கொள்ள வேண்டிய நேரம்; பிள்ளை வீட்டுக்காரரில் முக்கியமானவர் ஒரு வெற்றிலையை எடுத்து, கல்யாணத்துக்கு இருக்கும் பெண்ணை அழைத்து, “இதில் சுண்ணாம்பு எடுத்துக் கொண்டு வா, அம்மா” என்றாராம். அந்தப் பெண் அப்படியே கொண்டு வந்து கொடுத்தாள். எல்லாரும் விடைபெற்றுக் கொண்டு போய்விட்டார்கள். பிறகு பெண்ணைப் பார்த்துச் சென்றவர், “உங்கள் பெண் எங்கள் குடும்பத்துக்கு ஏற்றவளாகத் தெரியவில்லை. அவளுக்குச் செட்டும் கட்டுமாக வாழத் தெரியாதென்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/69&oldid=1150236" இலிருந்து மீள்விக்கப்பட்டது