பக்கம்:புது டயரி.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



நாலாவது

சங்கீத வித்துவான்கள் எல்லோருமே, முக்கியமாக வாய்ப்பாட்டுக்காரர்கள், வெற்றிலை பாக்குப் புகையிலை போடுபவர்களாக இருக்கிறார்கள். வெறும் தாம்பூலம் அல்ல; புகையிலையோடு சேர்ந்த தாம்பூலம். புகையிலை வராததற்கு முன்பு வெற்றிலை, பாக்கு இரண்டையும் போடுவார்கள். சுண்ணாம்பு தடவிக் கொள்வார்கள். சுண்ணாம்பு என்று சொல்கிறதில்லை. ‘மூணாவது’ என்று சொல்வார்கள். தாம்பூலம் போடுகிறவர்கள் அதிகமாக, இருந்தால் அவ்விடத்தில், வெளியில், அவர்கள் துப்பிய எச்சில் அவர்கள் திருவாய் குதப்பியதை அடையாளம் காட்டும். சற்றுத் துாரச் சென்று துப்புவார்கள். ஆனால் மற்றோர் அடையாளத்தை எங்கே பார்த்தாலும் காணலாம். சுண்ணாம்பை வெற்றிலையில் தடவி விட்டு மிச்சத்தை அப்படியே கைக்கு எட்டிய இடத்தில் தீற்றி விடுவார்கள். விளக்குக் கம்பமோ, சுவரோ, தட்டியோ எதுவானாலும் சுண்ணாம்பைத் தீற்றுவார்கள். சென்னைக்கு வந்து பாருங்கள். ஒவ்வொரு விளக்குக் கம்பத்திலும் கொஞ்சமாவது சுண்ணும்பின் அறிகுறி இருக்கும். இப்படி அந்த மூணாவது எங்கும் வியாபித்திருக்கிறது.

‘மூணாவது’ என்றவுடன் எனக்கு ஒரு நினைவு வருகிறது. திரிசிபுரம் மகாவித்துவான் ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் பல சமயம் பட்டீச்சுரத்தில் இருந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/68&oldid=1150234" இலிருந்து மீள்விக்கப்பட்டது