பக்கம்:புது டயரி.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

புது டயரி

 மித்திரன் ஆசிரியராக இருந்த அமரர் ஸி. ஆர். சீனிவாசன் இந்த அற்புதமான சாதனையைச் செய்தவர்.

புதுமைப்பித்தன் வந்தார் என்றல்லவா சொன்னேன்? “என்ன, கன்னத்தில் கையை வைத்து உட்கார்ந்திருக்கிறீர்கள்?” என்று கேட்டார். ‘பல்வலி’ என்றேன். “இது தானா? இந்தாருங்கள் மருந்து” என்று தம் கையிலுள்ள டப்பாவிலிருந்து சிறிது புகையிலையை எடுத்துத் தந்து,“இதை வலிக்குமிடத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இதமாக இருக்கும். பல்வலி நின்றுவிடும்” என்றார். என் இளமையில் நான் பட்ட அநுபவம் நினைவுக்கு வந்ததனால் நான் அதை வாங்கிக் கொள்ளத் தயங்கினேன். “ஒன்றும் ஆகாது. தாராளமாக இதைப் பல்லில் வைத்துக்கொள்ளுங்கள். சாற்றை விழுங்க வேண்டாம். துப்பி விடுங்கள்” என்று பிரயோகத்தை உபதேசித்தார். அவர் சொன்ன உறுதிமொழியைக் குருநாதரிடம் ஞானுாபதேசம் பெறும் சிஷ்யனைப்போலக் கேட்டுப் புகையிலையில் சிறிதளவு எடுத்து, திடீரென்று பல்லில் வைக்காமல், இரண்டு மூன்று முறை வாய்க்குப் பக்கம் கொண்டுபோவதும் திரும்புவதுமாக இருந்து, மறுபடியும் குருநாதர், “பயப்படாமல் வைத்துக் கொள்ளுங்கள்” என்று அடித்துச் சொன்னவுடன், மெல்ல வலிக்கும் இடத்தில் வைத்தேன்.

ஆ! அந்த இன்பத்தை என்னவென்று சொல்வது வலி மாறியது. அது பெரிதன்று. புகையிலையின் சாறு அங்கே பட்டவுடன் நரம்பிலே ஒரு கிளுகிளுப்பு உண்டாயிற்று. பல்லின் வலி கண்ணையும் மூளையையும் தாக்கியது மாறி இப்போது இந்தப் புகையிலையின் ரசம் நரம்பினூடே விறுவிறுப்பை ஏற்றியது. வலித்த இடத்தில் இன்ப உணர்வு தலைப்பட்டது. இப்படியும் ஒரு சுகம் இருக்கிறதே என்ற இரகசியம் தெரிந்தது. வலியினால் தாடையை அழுத்திப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/75&oldid=1150791" இலிருந்து மீள்விக்கப்பட்டது