பக்கம்:புது டயரி.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாலாவது

71

 வருக்கு இருப்பதாக அவா் சொல்லவில்லையே’ என்றாள். மற்றவர்களுக்கு இருக்கும் பெருமை தனக்கு இல்லை என்ற உணர்வோடு, தன் பத்திரம் இன்னதென்று பிரம்மதேவன் சொல்லவில்லையே என்ற கோபமும் சேர்ந்துகொண்டது. வீட்டுக்கு வந்து ஒளபாசனத்துக்கு வேண்டியவற்றை யெல்லாம் எடுத்துவைத்துவிட்டு, “உங்களுக்கு இன்ன பத்திரம் என்று சொல்லாமல் என்னை அவமானம் அடையும் படி செய்து விட்டீர்களே!” என்று சொல்லி உள்ளே ஊடிக்கொண்டு படுத்திருந்தாள்.

நாரதர் பூலோகத்தில் கிடைத்த பெரிய எலுமிச்சம் பழங்களைப் பார்த்துத் திருமாலுக்குக் கையுறையாகக் கொடுக்கலாமென்று வாங்கிக்கொண்டு போனார். ஒரு தட்டில் அந்தப் பழங்களை வைத்துக் குட்டையும் புஷ்டியுமுள்ள ஒரு தேவலோக வாசியிடம் அதைக்கொடுத்துத் தம்முடன் வரச் சொல்லிப் பாற்கடலை அணுகினார். பாற்கடலின் ஒரத்தை அடைந்தபோது அந்தத் தேவலோகவாசி கால் தடுக்கி, தட்டு முன்னே விழக் கீழே விழுந்த எலுமிச்சம் பழங்களின்மேல் விழுந்தான். அதனால் அவை நசுங்கி அவற்றின் சாறு பாற்கடலில் பீச்சி அடித்தது. அந்தப் பகுதி தயிராயிற்று. மெல்ல மெல்ல அதன் சார்பினால் பாற்கடல் முழுவதுமே தயிர்க் கடலாகியது. அதனால் குளிர்ந்த காற்று வீசியது. அது பட்டு ஆதிசேஷனுக்கு ஜலதோஷம் பிடித்து அவன் ஆயிரம் வாயினாலும் தும்மினான். பிறகு கருடன் தும்ம, பிராட்டி தும்ம, பெருமாளே தும்மினார். ஏன் இப்படி ஆயிற்று என்று கருடபகவான் பறந்து சென்று பார்த்து, உண்மையை உணர்ந்து, பூலோகத்துப் பொருளாகிய எலுமிச்சம் பழத்தினால் விளைந்த விளைவு இது என்பதைப் பெருமாளிடம் வந்து அறிவித்தான்.

‘எப்போதும் குளிர்ந்த இமாசலத்தில் இருக்கும் சிவபிரானிடம் இதற்கு மருந்திருக்கும்’ என்று எண்ணித்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/78&oldid=1150812" இலிருந்து மீள்விக்கப்பட்டது