பக்கம்:புது டயரி.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

புது டயரி

 திருமால் பரிவாரங்களோடு சிவபெருமான நோக்கிச் சென்றார், அதற்கு முன்பே தயிர்க் கடலிலிருந்து வீசிய காற்றுக் கைலாசத்தையும் அடைய, அதுபட்டு அங்கே உள்ளவர்களெல்லாம் தும்மத் தொடங்கினார்கள். தும்மிக்கொண்டே போன திருமால் முதலியவர்களின் தும்மல் ஒலிக்கு எதிரொலிபோல அங்கே ஒலி எழுந்தது. திருமாலும் சிவனும் சந்தித்துத் தும்மிய பிறகு, “இது பூலோக விவகாரம். பிரம்மாவுக்கு இதற்குப் பரிகாரம் தெரிந்திருக்கலாம். மரியாதையைப் பாராமல் அவசரத்தை முன்னிட்டு அங்கே, போகலாம்” என்று இருவரும் பரிவாரங்களுடன் பிரம்ம தேவனுடைய திருமாளிகையை அடைந்தார்கள்.

அவன் எல்லை இல்லா உவகையுடன் அவர்களை வரவேற்க,அவர்கள் தும்மலோடு ஆசி கூறி, ஏதாவது பரிகாரம் உண்டா என்று கேட்டார்கள். “இதோ புதிய பரிகாரக்தையே தருகிறேன்” என்று சொல்லிய பிரம்மதேவன். ஒளபாசன அக்கினியை ஊதினான். புகை எழுந்தது. அதில் ஓர் இலையும் எழுந்தது. அதை எடுத்து அந்த அக்கினியிலே அதை வாட்டிச் சருகாக்கிக் கையில் வைத்துப் பொடிபண்ணி, அதில் ஒவ்வொரு சிட்டிகை எடுத்துத் திருமால் முதலியவர்களுக்குக் கொடுத்தான். அவர்கள் காசியில் உறிஞ்சியவுடன் வெடி வெடித்தது போல் உரத்த, தும்மல்கள் உண்டாயின. அவ்வளவுதான். ஜலதோஷம், போயிற்று, தும்மல் நின்றது!

அப்பால் பிரம்மதேவன், “சரஸ்வதி!” என்று அழைத்தான். அவள் வந்து நின்றாள். இரண்டாம் முறை ஒளபாசன அக்கினியை ஊதினான். புகை எழுந்தது; இலையும் எழுந்தது; அதைக் கலைமகள் கையில் கொடுத்து, “இந்தா இதுவே எனக்குரிய பத்திரம்” என்று கூறினான். இது என்னால் உண்டானதால் பிரம்ம பத்திரம் என்றும் புகையில் உண்டானதால் துாமபத்திரம், புகையிலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/79&oldid=1150820" இலிருந்து மீள்விக்கப்பட்டது