பக்கம்:புது டயரி.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



புது டயரி

சமீபத்தில் புத்தாண்டு பிறக்க இருந்தது.

ஒரு நல்ல டயரியாக வாங்கி நாள்தோறும் விடாமல் எழுதவேண்டுமென்று தீர்மானித்தேன். நல்ல டயரியாக வாங்கவேண்டும்; கிடைப்பதற்குள் பெரியதாக வாங்க வேண்டும்.

‘பெரியதாக வாங்கி எதை எழுதப் போகிறோம்?’ என்ற எண்ணம் தோன்றினாலும் பிறகு அதுதான் சரி என்று நினைத்தேன். ஆம். அன்றன்று நடக்கும் நிகழ்ச்சிகளை எழுதலாம். யாரை யாரைச் சந்தித்தோம் என்று எழுதலாம். யார் யார் என்னைப் பார்க்க வந்தார்கள் என்று எழுதலாம். முக்கியமான நிகழ்ச்சிகளையும், நான் எழுதிய கட்டுரைகளையும், பேசிய சொற்பொழிவுகளையும் பற்றி எழுதலாம். வேண்டுமானால் வரவு செலவுகூட எழுதி வைக்கலாம். தனித் தனி விவரமாக இல்லாவிட்டாலும் ஒரு நாளில் மொத்தமாக என்ன வரவு வந்தது, என்ன செலவு என்று எழுதலாம். இப்படி எழுதினால் ஒரு பக்கம் என்ன, இரண்டு பக்கம் கூட வேண்டியிருக்கும்.

எனவே, கடைக்குப் போய் எட்டு ரூபாய் கொடுத்து ஒரு பெரிய டயரியை வாங்கி வந்தேன். அதைப் பார்க்கிற போதே எனக்குப் பெருமையாக இருந்தது. ஒரு வருஷம் கழித்து அதைப் பார்த்தால் எப்படி இருக்கும்! என்னுடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/8&oldid=1149385" இலிருந்து மீள்விக்கப்பட்டது