பக்கம்:புது டயரி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

புது டயரி

 வாழ்க்கையின் ஒர் ஆண்டுப் பகுதியே அதில் இருக்கும். இப்படித்தானே பெரிய மனிதர்களெல்லாம் டயரி எழுதி வைத்துக்கொண்டு சுய சரிதம் எழுதுகிறார்கள்? என் முன்னால் இருந்த டயரி, டயரியாகத் தோன்றவில்லை; என்னுடைய சுயசரிதத்தின் ஒரு பாகமாகவே தோன்றியது. அதைப் பத்திரமாக மேஜை டிராயரில் வைத்து மூடினேன்.

புத்தாண்டு பிறந்தது. பல் தேய்த்துவிட்டு வந்தேன். பால்கூடக் குடிக்கவில்லை. ஆம், என்னுடைய கடுமையான விரதத்தை இங்கே சொல்லிக் கொள்ளாமல் வேறு எங்கே சொல்வது? நான் காபி குடிப்பதில்லை; ஒவல்டின் அருந்து வதில்லை; போன்விடா சாப்பிடுவதில்லை; டீக்கூட நுகர்வதில்லை; பால் சாப்பிடுவேன்; தப்பினால் ஹார்லிக்ஸ் சாப்பிடுவேன்; அவ்வளவுதான்.

பல் தேய்த்து வந்தேனா? வந்தவுடன் டிராயரிலிருந்த டயரியை எடுத்தேன். முதல் தேதிப் பக்கத்தைத் திருப்பினேன். முதலில் பிள்ளையார் சுழி போட்டேன். பிறகு எழுதத் தொடங்கினேன்.

‘இன்று இங்கிலீஷ்ப் புது வருஷம் ஆரம்பமாகிறது. ஜனவரி முதல் தேதி’ என்று எழுதினேன். அதன் மேல் ஓர் யோசனை வந்தது.‘ஆங்கிலப் புத்தாண்டுத் தொடக்கம் என்று எழுதாமல் இங்கிலிஷையும் வடமொழியையும் கலந்து எழுதியிருக்கிறோமே யாராவது நமது தமிழுணர்வைப்பற்றி ஐயப்பட்டால் என்ன செய்வது?’ இப்படி எண்ணினேன்; இங்கே ஒன்றை அவசியம் சொல்லவேண்டும். நான் தமிழுணர்வு என்றுதான் நினைத்தேன். ஏனென்றால் இப்போதெல்லாம் தமிழறிந்தவர்களில் பல பல வகுப்புப் பிரிவினைகளைச் செய்திருக்கிறார்கள். தமிழ்ப்புலமை, தமிழறிவு, தமிழ்த் தேர்ச்சி, தமிழ் அன்பு என்ற இவ்வளவும் தமிழுணர்வு இல்லாவிட்டால் வீணாகிவிடும். தமிழுணர்வு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/9&oldid=1149386" இலிருந்து மீள்விக்கப்பட்டது