பக்கம்:புது டயரி.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உண்பதும் ஒரு கலை

81

 உப்புப் போடவேண்டும். குட்டிச் சமையற்காரர் முறத்தில் உப்பை வாரிப் போட்டுக் கொண்டிருப்பார். அரிசி மூட்டைச் சிங்காதனத்தில் அமர்ந்திருக்கும் சமையற்கலை மன்னர் அங்கிருந்தபடியே கவனித்துக் கொண்டிருப்பார். ‘ஐந்து முறம் போடு’ என்பார். குட்டித் தொண்டர் போடுவார். ‘ஆருவது முறம் எடுத்துக் கொஞ்சம் கொஞ்சமாகத் தட்டு’ என்பார். அப்படியே அவர் தட்டுவார். ‘ஹும். இன்னும் கொஞ்சம், இன்னும் கொஞ்சம்’ என்று மன்னர் சொல்லிக்கொண்டே வருவார். ஒரு நிலையில், “போதும்; நிறுத்து” என்பார். அந்த ரசக் குட்டையில் உப்புக் கணக்காகச் சேர்ந்து அதை மிகவும் ரசமுள்ளதாகச் செய்துவிடும். அந்த மன்னர் கண்ணினாலே பார்த்து அளவைக் கணிப்பவர். அவருக்கு அப்படி ஓர் உணர்வு!

இங்கே, என்னுடைய ஆசிரியப் பெருமான் மகா மகோபாத்தியாய ஐயாவர்கள் சொன்ன நிகழ்ச்சி ஒன்று நினைவுக்கு வருகிறது.

புதுக்கோட்டைச் சம்ஸ்தானத்தில் அந்தக் காலத்தில் சேஷையா சாஸ்திரிகள் என்பவர் திவானாக இருந்தார். அவர் மிகச் சிறந்த அறிவாளி. அவர் செய்த காரியங்களை யெல்லாம் கதை கதையாகச் சொல்வார்கள். ஒரு சமயம் ஒரு பெரிய சமையற்காரர் அவரிடம் வந்தார். “எத்தன ஆயிரம் பேரானாலும் என்ன என்ன வேண்டுமோ அவற்றையெல்லாம் நன்றாகப் பண்ணிப் போடுவேன்” என்றார். “உமக்கு நன்றாக ரசம் வைக்கத் தெரியுமா?” என்று திவான் கேட்டார். “என்ன அப்படிச் சொல்கிறீர்கள்? ரசத்தில்தானே எங்களுடைய திறமையைக் காட்ட முடியும்?” என்றார்.

அந்தக் காலத்தில் ரசத்தில் தெளிவு இருக்கும். அடுப்பில் காயும்பொழுதே கம்மென்று மணக்கும். குழம்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/88&oldid=1151062" இலிருந்து மீள்விக்கப்பட்டது