பக்கம்:புது டயரி.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

புது டயரி

 குழம்பாயிருக்கும்; ரசம் தெளிவாக இருக்கும். குழம்பில் தான் இருக்கும். ரசத்தில் அது இல்லை. வாழ்க்கை கூடக் குழம்புபோலக் குழம்பாமல் ரசம்போலத் தெளிவாக, ஞானக்தோடு இருக்கவேண்டுமானால் தான் என்ற அகந்தை இருக்கக் கூடாது. ஆனால் இப்போதெல்லாம் ரசம் வைக்கத் தெரியாதவர்களெல்லாம் அதில் தக்காளியைப் போட்டு அதிலும் தானைக் கலந்து விடுகிறார்கள்.

அந்தச் சமையல்காரர் தெளிவான ரசம் பண்ணுகிறவர். “நன்றாக ரசம் செய்வேன்” என்றார். புதுக்கோட்டையில் குடி தண்ணீருக்காகப் புதுக்குளம் என்ற பெரிய குளம் இருக்கிறது. அதற்குக் காவல் போட்டு வைத்திருப்பார்கள். சேஷையா சாஸ்திரியார் அந்தச் சமையற்காரரைப் பார்த்து, “புதுக்குளத்தில் ரசம் வைப்பீரா?” என்று கேட்டார். ஆள் அசந்து போவார் என்று அவர் நினைத்தார். அந்தக் கலைஞர் என்ன சொன்னார் தெரியுமோ?

“நான் சொல்கிறபடி செய்து, வேண்டிய சாமான்களையும் கொடுத்தால் புதுக்குளத்தில் ரசம் வைத்துக் காட்டுவேன்” என்று துணிச்சலாகச் சொன்னார். “என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார் திவான்.

“அந்தக் குளத்தைச் சுத்தமாக இறைத்துவிட வேண்டும். பதினைந்து நாள் யாரையும் உள்ளே விடக்கூடாது. நான் கொடுக்கிற லிஸ்டின்படி சாமான்களை வாங்கித் தர வேண்டும், அப்படிச் செய்தால் புதுக்குளத்தில் ரசம் உண்டாக்கித் தருகிறேன்.”

சேஷையா சாஸ்திரியார் விளையாட்டுக்காகக் கேட்கவில்லை. கலைஞரின் திறமையை அறிவதற்காகவே கேட்டார். அந்தக் கலைஞரும் திவான் சொன்னதை நடத்திக் காட்டுவதாக உறுதி மொழி கூறினார். அது கோடைக் காலம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/89&oldid=1151069" இலிருந்து மீள்விக்கப்பட்டது