பக்கம்:புது டயரி.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

புது டயரி

 சிறிது சிறிது எடுத்து, அதன் விவரத்தையும் சொல்லி அவர் கையில் வைத்தார்கள். ஒவ்வொன்றின் பெயரையும் செய்முறையையும் விசாரித்து உண்டு அவர் ரசித்துப் பாராட்டினாராம்.

ஒளவைப் பாட்டி பாரிமகளிராகிய அங்கவை,சங்கவை என்பவர்கள் வாழ்ந்த குடிசைக்குப் போனாள். தந்தையை இழந்த அவர்கள் வறிய நிலையில் இருந்தார்கள். ஒளவைப் பாட்டி போனபோது அவருக்கு உணவளித்தார்கள்.மிகவும் எளிய முறையில் உணவு வழங்கினார்கள்.கீரையை வதக்கிப் போட்டார்கள். “எங்களாலே வேறு ஒன்றும் செய்யமுடியவில்லையே” என்று வருந்தினார்கள். அப்போது ஒளவையார், “கீரையையா போட்டீர்கள்? அமுதத்தையல்லவா வழங்கினீர்கள்?” என்று சொல்லி அந்த எளிய உணவைச் சுவைத்து மகிழ்ந்தார். அந்தக் கீரையைப் பாராட்டி ஒரு பாட்டே பாடிவிட்டார்.

“வெய்தாய் நறுவிதாய் வேண்டளவும் தின்பதாய்
நெய்தான் அளாவி நிறையிட்டுப்-பொய்யே
அடகுஎன்று சொல்லி அமுதத்தை இட்டார்
கடகம் செறியாதோ கைக்கு?”

(வெய்தாய்—குடுள்ளதாய். நிறைய இட்டு என்பது நிறையிட்டு என வந்தது. அடகு-கீரை. இந்தக் கைக்கு இரத்தினக் கடகம் அல்லவா போடவேண்டும் என்பது கருத்து.)

இராமபிரானுக்கு எத்தனையோ வகையான திறமைகள் உண்டு. சுவை அறிந்து சாப்பிடுவதிலும் அவன் வல்லவன். அதனால்தான் சாப்பாட்டு ராமன் என்ற திருநாமம் அவனுக்கு உண்டாயிற்று. எப்போது தெரியுமா?

பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செய்து காய், கனி, கிழங்குகளையே உண்டுவந்தான். சீதையைப் பிரிந்த பிறகு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/93&oldid=1151081" இலிருந்து மீள்விக்கப்பட்டது