பக்கம்:புது டயரி.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உண்பதும் ஒரு கலை

87


சுவையே பாராமல் எப்படியோ கால் வயிற்றை நிரப்பி வந்தான். இராவண சங்காரம் ஆன பிறகு தன் படைகளுடன் வான விமானத்தில் திரும்பினான். இடையிலே பாரத்துவாஜ முனிவர் ஆசிரமத்தில் தங்கினான். முனிவர் அவனுக்கு மிகவும் சுவையான விருந்து வழங்கினார். அதைச் சுவைத்து உண்டான். அந்த நுகர்ச்சியிலே ஈடுபட்டபோது அயோத்திக்குப் போவதில் தாமதம் உண்டாகலாம் என்று கருதி அநுமனை அனுப்பித் தானும் பிறரும் வந்துகொண்டிருப்பதைப் பரதனுக்குச் சொல்லச் சொன்னான்.

பாரத்துவாஜர் ஆசிரமத்தில் பெருமாள் சாப்பாட்டு ராமனாக இருந்தமையால் இப்படிச் செய்யவேண்டி நேர்ந்தது.

இராமனே உண்ணும் கலையில் வல்லவ னென்றால், நமக்கு வேறு கலை எதுவும் தெரியாவிட்டாலும் அந்தக் கலை யிலாவது சிறந்து நிற்கலாம் அல்லவா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/94&oldid=1151093" இலிருந்து மீள்விக்கப்பட்டது